அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

அறுவடைக் கருவி WhatsApp Image 2022 03 01 at 09.34.37

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஓவியா, பூஜா, பூஜா, பிரவீனா, பவித்ரா, பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை எடுத்துரைப்பதுடன் செயல் விளக்கமும் செய்து காட்டுகின்றனர்.

இவ்வகையில், இம்மாதம் முதல் தேதியில், தஞ்சை மாவட்டம், கீழக்குறிச்சி விவசாயி கோபிநாத்தின் தோட்டத்துக்குச் சென்ற அவர்கள், அறுவடைக் கருவி (hand twine knife) பற்றிய தகவல்களை அளித்தனர்.

மேலும், அதைப் பயன்படுத்தும் முறையைச் செயல் விளக்கமாகவும் செய்து காட்டினர். இதைத் தொடர்ந்து விவசாயிகளும் அந்த அறுவடைக் கருவியைப் பயன்படுத்திப் பார்த்து அதன் பயன்களை உணர்ந்தனர்.


Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading