பச்சை பூமி சார்பில் 2021 அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒட்டன்சத்திரத்தில் முதன் முதலாக விவசாயக் கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்திலும், 2022 மார்ச் மாதம் நாமக்கல்லிலும், மே மாதம் பொள்ளாச்சியிலும், ஜூலை மாதம் தேனியிலும் என ஐந்து விவசாயக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இம்மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில், ஒட்டன்சத்திரம் அபி மஹாலில் இரண்டாம் முறையாக, பச்சை பூமியின் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.
இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் வணிகத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பால்வளத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி, யூனியன் வங்கி ஆகிய அரசு துறைகள் சார்ந்த அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
மேலும், ஸ்பிக், ஸ்வராஜ் டிராக்டர், மகிந்திரா டிராக்டர், அமராவதி அக்ரோ காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட தனியார் வேளாண்மை நிறுவனங்கள் சார்பில், விதைகள், உரங்கள், எந்திரங்கள், கருவிகள், நாற்றங்கால்கள் எனப் பல்வேறு அரங்குகள், பார்வையாளர்கள் பார்த்துப் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், இந்த மூன்று நாள் கண்காட்சியைப் பல்லாயிரம் விவசாயிகள் பார்த்துப் பயனடைந்தனர்.
சந்தேகமா? கேளுங்கள்!