நாமக்கல்லில் இரண்டாவது முறையாக சிறப்பாக நடந்து முடிந்த விவசாயக் கண்காட்சி!

ச்சை பூமி சார்பில், நாமக்கல்லில் இரண்டாம் முறையாக, 2023 மே மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. இது, பச்சை பூமி நடத்திய பத்தாவது விவசாயக் கண்காட்சியாகும்.

+ மூன்று நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த இந்தக் கண்காட்சியில், வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கத் தேவைப்படும் நாட்டு விதைகள், நவீன விதைகள் நிறைந்த அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

+ மண்ணையும் மக்களையும் காக்கும் வகையில், இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதற்கான, இயற்கை உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

+ டிராக்டர் நிறுவனங்கள், ரொட்டோவேட்டர் போன்ற உழவுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் அங்கம் வகித்தன.

+ சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில், சூரிய மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் அடங்கிய அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

+ விவசாய வேலைகளுக்குத் தேவையான அரிவாள், மண்வெட்டி, கொத்து உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.

+ பயிர்களைக் காக்க உதவும், நவீனச் சூரிய மின்வேலி மற்றும் கம்பிவேலி தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகள் இடம் பிடித்திருந்தன.

+ எளிய வகையில் உடல் நலம் காக்கும் மூலிகை மருத்துவப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.

+ தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, பலா, மாதுளை போன்ற பழமரக் கன்றுகள், தேக்கு, சந்தனம், மகாகனி போன்ற பணமதிப்புள்ள மரக்கன்றுகள் அடங்கிய நாற்றுப் பண்ணைகளின் அரங்குகள் அங்கம் வகித்தன. ஈஷா அமைப்பின் சார்பில் 3 ரூபாய் விலையில் கன்றுகள் வழங்கப்பட்டன.

+ அரசு நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

+ இந்தக் கண்காட்சியில் சிற்றுண்டி மற்றும் உணவு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.

+ மொத்தத்தில், ஏராளமான அரங்குகளுடன், எந்தக் குறையும் இல்லாமல், கண்காட்சியில் பங்கேற்கும் அனைவரும் மனநிறைவைப் பெறும் வகையில், இந்தக் கண்காட்சி சிறப்பாக அமைந்திருந்தது.

+ விவசாயிகள், பொது மக்கள் என, பல்லாயிரம் பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை இலவசமாகப் பார்த்துப் பயனடைந்தனர்.

+ இந்தக் கண்காட்சியை, தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் பார்வையிட்டுச் சிறப்பித்தார்.


பச்சை பூமி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!