பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் 16.09.2022 அன்று ஆயுத பூஜை மற்றும் தீபாவளி சிறப்பு இனிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.
மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் பொருள்கள், சுமார் 4.5 இலட்சம் கிராமப்புறப் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் பால் மூலம் தயாரிக்கப்படுகின்றன. ஆவின், மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மூலம், சுகாதாரமான முறையில் பால் மற்றும் 225 வகையான பால் பொருள்களைத் தயாரித்து, நுகர்வோர்க்கு நியாயமான விலையில் வழங்கி வருகிறது.
மேலும், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள இலட்சக் கணக்கான பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தைப் பெரியளவில் மேம்படுத்த ஆவின் உதவுகிறது.
இந்நிலையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இவ்வகையில், 250 கிராம் நெய் பாதுஷாவின் விலை 190 ரூபாய் ஆகும். இதே எடையில் உள்ள நட்ஸ் அல்வா 190 ரூபாய், ஸ்டப்டு மோதிபாக் 180 ரூபாய், காஜூ பிஸ்தா ரோல் 320 ரூபாய், காஜு கத்லி 260 ரூபாய், நெய் அல்வா 125 ரூபாய், கருப்பட்டி அல்வா 170 ரூபாய் விலையில் கிடைக்கும். 500 கிராம் பலவகை இனிப்புகள் 450 ரூபாய், 200 கிராம் மிக்ஸர் 100 ரூபாய் விலையில் கிடைக்கும்.
இந்த இனிப்புகள் சுத்தமான ஆவின் நெய்யில் தயாரிக்கப்படுகின்றன. நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் பலவகை இனிப்புகள், சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் தயாரிக்கப்பட்டு, தானியங்கி முறையில் அடைக்கப்படுகின்றன. இதனால், இனிப்பு வகைகளைப் பல நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். கருப்பட்டி அல்வா விருதுநகர் ஒன்றியத்திலும், நெய் அல்வா திருநெல்வேலி ஒன்றிய பால் பண்ணையிலும் தயாரிக்கப்படுகின்றன.
இவை அனைத்தும், மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், சாலைச் சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் என, தமிழகம் முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம், சில்லறை விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முகவர்கள் மூலம் விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான காரம் மற்றும் இனிப்பு வகைகளை ஆவின் நிறுவனத்தில் முன்பதிவு செய்து பெறலாம்.
மொத்தமாக முன்பதிவு செய்வதற்கு, பின்வரும் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம்.
சென்னை தலைமை அலுவலகம்: 73580 18395
சென்னை (தெற்கு மண்டலம்): 73580 18391
சென்னை (வடக்கு மண்டலம்): 73580 18392
சென்னை (மத்திய மண்டலம்): 73580 18393
இதர மாவட்டங்கள்: 73580 18396
வாட்ஸ்அப் எண்: 73580 18390
கட்டணமில்லா எண்: 1800 425 3300
மின்னஞ்சல் முகவரி: aavinspecialorders@gmail.com
இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!