கொள்ளு சாகுபடி!

கொள்ளு horsegram

கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது.

தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப் படுகிறது.

இரகங்கள்

பையூர் 1: இது, மேட்டூரில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரகம். வயது 110 நாட்கள். எக்டருக்கு 650 கிலோ மகசூலைத் தரும். தருமபுரி, மதுரை, இராமநாதபுரம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் மானாவாரியில் பயிரிட ஏற்றது.

பயூர் 2: இது, கோ.1 இரகத்தைக் காமா கதிர்கள் மூலம் சடுதி மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட இரகம். வயது 105 நாட்கள். எக்டருக்கு 870 கிலோ மகசூலைக் கொடுக்கும்.
தமிழ்நாட்டின் நீலகிரி, கன்னியாகுமரி நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் மானாவாரியில் பயிரிடலாம்.

விதைநேர்த்தி

தனிப் பயிராகப் பயிரிட எக்டருக்கு 20 கிலோ விதைகள் தேவை. இந்த விதைகளை, ஒரு கிலோ விதைகளுக்கு இரண்டு கிராம் கார்பன்டாசிம் வீதம் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்து, இந்த விதைகளை, ஒரு பொட்டலம், ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா அல்லது 125 மி.லி. ரைசோபியம், 125 மி.லி. பாஸ்போ பாக்டீரியாவில் கலவையைத் தயாரித்து நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைநேர்த்தி செய்யாத நிலையில், எக்டருக்கு பத்துப் பொட்டலம் ரைசோபியம், பத்துப் பொட்டலம் பாஸ்போ பாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மணலில் கலந்து, விதைகளை விதைக்கும் முன் நிலத்தில் இட வேண்டும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 3-4 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும்.

மேலும், 27.5 கிலோ யூரியா, 157.5 கிலோ சூப்பர் பாஸ்பேட், 20 கிலோ பொட்டாசை அடியுரமாக இட வேண்டும்.

அத்துடன், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துக் குறையுள்ள நிலத்தில், 25 கிலோ துத்தநாக சல்பேட், 25 கிலோ பெரஸ் சல்பேட்டை இட வேண்டும்.

விதைப்பு

வரிசைக்கு வரிசை 30 செ.மீ., செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து 20-25 நாட்களில் கொத்து மூலம் களையெடுக்க வேண்டும்.

அறுவடை

எல்லாக் காய்களும் முற்றிய நிலையில் அறுவடை செய்ய வேண்டும். பிறகு, களத்தில் இட்டுக் காய வைத்து, விதைகளைப் பிரித்து எடுக்க வேண்டும்.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை,

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading