My page - topic 1, topic 2, topic 3

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திண்டமங்கலம் கிராமத்தில் விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் சார்பில், காளியண்ணன் என்பவரின் நிலத்தில், வம்பன்-4 பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை, சின்னுசாமி, கணேசன் ஆகியோரது நிலங்களில், டி.எம்.வி-14 நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இவற்றை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, விதைப் பண்ணையின் முக்கியத்துவம், விதைப் பண்ணையில் கலவன் நீக்குதல், பயிர் விலகு தூரப் பராமரிப்பு, பயிர் வளர்ச்சிப் பருவம், பூக்கும் போது செய்ய வேண்டிய நுண்ணுர மேலாண்மை மற்றும் பூச்சி, நோய்த் தாக்குதல் இன்றிப் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்,

விதை உற்பத்தி வயல்களை விதைச் சான்றளிப்புக்கு உட்படுத்துவதன் மூலம், இனக் கலப்பற்ற, சுத்தத் தன்மையுள்ள தரமான விதைகளை உற்பத்தி செய்ய முடியும் எனவும், விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். ஆய்வின் போது, நாமக்கல் வட்டார உதவி விதை அலுவலர்கள் சங்கர், பொன்னுவேல் ஆகியோர் உடனிருந்தனா்.


செய்தி: விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் அலுவலகம், நாமக்கல்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks