My page - topic 1, topic 2, topic 3

நிலத்தில் பாசி படர்வதைத் தடுக்கும் முறைகள்!

நிலத்தில், பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் பாசி வளர்வது, மண்ணில் மணிச்சத்து அதிகமாக இருப்பதையும், பாசன நீரில் பை கார்பனேட் உப்பு அதிகமாக இருப்பதையும் காட்டுகிறது.

எனவே, மண்ணையும், பாசன நீரையும், மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

நிலத்தில் படரும் பாசி, பயிருக்கு பிராண வாயுவைக் கிடைக்க விடாமல் தடுப்பதுடன், வயல் நீர், கரியமில வாயு கலந்து நுரைத்துக் காணப்படும்.

நுண்சத்துப் பற்றாக்குறை ஏற்படும். பயிரின் வளர்ச்சித் தடைப்படும். வேர்கள் கறுப்பாகி, மண்ணில் பிடிமானம் குறையும்.

நாற்றங்காலிலும், நடவு வயலிலும், பச்சைப் பாசி படர்வதைத் தடுக்க, சாதாரணமாக வயலுக்கு இடும் அளவை விட, பொட்டாசை அதிகமாக இட வேண்டும். அத்துடன், ஏக்கருக்கு ஒரு கிலோ தாமிர சல்பேட் வீதம் இட வேண்டும்.

நாற்றங்காலில், சென்ட்டுக்கு 1-2 கிலோ பொட்டாசை அடியுரமாக இடலாம். பாசி படர்ந்துள்ள சூழலில், மணிச்சத்தை மண்ணில் இடுவதோ, டை அம்மோனியம் பாஸ்பேட்டைத் தெளிப்பதோ கூடாது.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks