கேள்வி:
பாக்கு நாற்று மற்றும் பாக்கு மரங்களுக்கு இடையில் இடுவதற்கு ஏற்ற ஊடுபயிர்?
– பழனிகுமாரசாமி, வெள்ளிமலைப் பட்டணம்.
பதில்:
அய்யா, பாக்கு நாற்றுகளுக்கு, தங்கராஜ் நர்சரி, சேலம், தொலைபேசி: 98427 12273 என்னும் எண்ணில் பேசுங்கள். பாக்குத் தோப்பில் மிளகை ஊடுபயிராக இடலாம். நன்றி!
கேள்வி:
தென்னை சாகுபடிக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
– தனராஜ், ஆரைக்குளம்.
பதில்:
அய்யா, ஆண்டு முழுவதும் நீர்வளம் இருக்க வேண்டும். இது, மிக மிக முக்கியம். ஏனெனில், ஒருமுறை வறட்சியில் சிக்கி விட்டால், அந்த வறட்சியில் இருந்து மரங்களை மீட்பதற்கு 3-4 ஆண்டுகள் ஆகும். நன்றி!
கேள்வி:
வாழைத்தார் பெரிதாகக் கிடைக்க, எந்த மாதிரியான உரம் இட வேண்டும்?
– பிரபாகரன், ஆரைக்குளம்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
பதிமுகம் மரக்கன்று கிடைக்குமா?
– மரகதம், நகனை.
பதில்:
அம்மா, உங்கள் பக்கத்தில் உள்ள நர்சரிகளில் கேட்டால், பதிமுகக் கன்று கிடைக்கும். நன்றி!
கேள்வி:
கொய்யாச் செடி உர மேலாண்மை பற்றிக் கூறுங்கள்.
– இராஜேகோபால், ஆரைக்குளம்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
பனை விதை ஊன்றியதில் இருந்து மரமாக வளர்ந்து காய்ப்புக்கு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்?
– பிரபாகரன், ஆரைக்குளம்.
பதில்:
அய்யா, சரியாகப் பராமரித்தால், குறைந்தது பத்து ஆண்டுகளில் பலனை எதிர்பார்க்கலாம். நன்றி!
கேள்வி:
கோழிப்பண்ணை வைக்கத் தேவையான உதவிகள்.
– R.ரவிச்சந்திரன், ஊ.மங்கலம்.
பதில்:
அய்யா, கோழிப்பண்ணை அமைக்க விரும்பினால், முதலில் கோழிப்பண்ணை பயிற்சி எடுங்கள். அங்கே உங்களுக்கு வேண்டிய தகவல்கள் கிடைக்கும். பயிற்சிக்கு, வேளாண்மை அறிவியல் நிலையம், உழவர் பயிற்சி நிலையம், கால்நடைப் பல்கலைக் கழகப் பயிற்சி மையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அணுகுங்கள். நன்றி!
கேள்வி:
நான் பருத்தி பயிரிட்டுள்ளேன். அதற்கான ஆலோசனைகளைத் தாருங்கள்.
– நேதாஜி, திருவாரூர்.
பதில்:
அய்யா, உங்களுக்கான விளக்கம் இந்தக் கட்டுரையில் உள்ளது. நன்றி!
கேள்வி:
SVPR1 எள் விதை எங்கே கிடைக்கும்?
– கே.மாரியப்பன், டி.கல்லுப்பட்டி.
பதில்:
அய்யா, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விவசாய டெப்போ உள்ளது. அங்கே சென்று கேளுங்கள். நன்றி!
சந்தேகமா? கேளுங்கள்!