My page - topic 1, topic 2, topic 3

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பாரதி கிராமியக் கலைக் குழுவினர், கலாஜாதா என்னும் கலை நிகழ்ச்சியின் மூலம், அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விவசாயிகள் தொழில் நுட்பப் பயிற்சி, விவசாயிகள் கண்டுணர்வு பயணம், விவசாயிகள் செயல் விளக்கத் திடல் அமைத்தல், விவசாயிகளுக்குப் பண்ணைப்பள்ளி மூலம் விதை முதல் அறுவடை வரையான அனைத்துத் தொழில் நுட்பச் செய்திகளை வழங்குதல்,

வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர் பாசனத் திட்டம், பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதித்திட்டம்,

தோட்டக்கலைத் துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பட்டு வளர்ப்புத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை மானியத் திட்டங்கள், உழவர் சந்தையின் முக்கியத்துவம் ஆகியன குறித்து, நாடகம், பாடல்கள், நகைச்சுவை மற்றும் கலந்துரையாடல் வடிவில் விவசாயிகளுக்கு வழங்கினர்.

இந்தக் கலை நிகழ்ச்சியை, அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர், ஹரிஹரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


செய்தி: நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks