My page - topic 1, topic 2, topic 3

கலை நிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டாரத்தில், கலை நிகழ்ச்சி மூலம், விவசாயத் தொழில் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள பவித்திரம் கிராமத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆத்மா திட்டத்தின் சார்பில், கிராமியக் கலை நிகழ்ச்சி வாயிலாக, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு, விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு, எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் முனைவர் சி.பாபு முன்னிலை வகித்தார்.

இதில், வேளாண்மைத் துறையின் மானியத் திட்டங்கள், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், பயிர்க் காப்பீடு, மண் பரிசோதனை, இயற்கை விவசாயம், உழவர் சந்தையின் முக்கியத்துவம் குறித்து, விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் நடனம், பாடல், நகைச்சுவை ஆகிய வடிவங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் சத்யா, வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் முனைவர் செ.நந்தகுமார் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் தேகப்பிரியா, காவியா ஆகியோர் செய்திருந்தனர்.


செய்தி: எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks