துவரையைத் தாக்கும் முட்டைக்கூடு நூற்புழு!

துவரை pigeon pea

துவரையைத் தாக்கும் பல்வேறு பூச்சி வகைகளில் முட்டைக்கூடு நூற்புழுவும் அடங்கும். இந்த நூற்புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகளை இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள்

+ இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாகி, வளர்ச்சிக் குன்றி இருக்கும்.

+ பயிர்களின் வளர்ச்சிக் குறைவதால், காய்களின் எண்ணிக்கையும் குறையும்.

+ துவரை, தட்டைப்பயறு, சோயா மொச்சை, உளுந்து, எள் போன்ற பயிர்களை, இந்த நூற்புழுக்கள் தாக்கும்.

+ இளம் பயிரில், முத்துப் போன்ற அல்லது எலுமிச்சை வடிவ, வெள்ளைப் பெண் நூற்புழுக்கள், வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

கட்டுப்பாடு

+ கோடைக் காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.

+ 2-3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு பயிர்களை, சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்.

+ எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதைப்புக்கு முன் நிலத்தில் இட வேண்டும்.

+ ஒரு கிலொ விதைக்கு 5 கிராம் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் எடுத்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

+ எக்டருக்கு 18.75- 25 கிலோ வீதம், கார்டாப் ஹைட்ரோக்ளோரைடு 4 சதவீதக் குருணை மருந்தை எடுத்து நிலத்தில் இட வேண்டும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading