மஞ்சளில் நல்ல மகசூலைப் பெற, முறையான உரமிடல் அவசியம். அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 22 கிலோ யூரியா, 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை, பார்களை அமைப்பதற்கு முன்பு இட வேண்டும். பார்களை அமைத்த பிறகு, 12 கிலோ பெரஸ் சல்பேட், 6 கிலோ துத்தநாக சல்பேட்டை, பார்களின் மீது தூவிவிட வேண்டும்.
அசோஸ் பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை, ஏக்கருக்கு 4 கிலோ வீதம் எடுத்து, நிலத்தில் ஈரம் இருக்கையில் தூவிவிட வேண்டும். நடவு செய்த 30, 60, 90 மற்றும் 120 நாளில், ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாசை இட வேண்டும்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், மஞ்சள் பயிருக்கென்று தனி நுண்ணுரக் கலவையைத் தயாரித்து வழங்கி வருகிறது.
ஐஐஎஸ்ஆர் பவர் மிக்ஸ் எனப்படும் இந்த நுண்ணுரக் கலவையை, ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் எடுத்து, நடவு செய்த 60 மற்றும் 90 நாளில் இலைகளில் தெளிப்பதன் மூலம், நுண்ணுரக் குறையைப் போக்கி, 10-15 சதம் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், கிழங்குகளின் தரமும் நன்றாக இருக்கும்.
தொகுப்பு: பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!