உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

தானிய உற்பத்தி PADDY PACKING

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023

மிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.

+ 2021-22 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகள் 120 இலட்சம் மெட்ரிக் டன்னாகும்.

+ எண்ணெய் வித்துகள், பருத்தி, கரும்பு உற்பத்தியும், சகுபடிப் பரப்பும் அதிகமாகும்.

+ இது, கடந்த 2020-21 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 108 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடுகையில், 12 இலட்சம் மெட்ரிக் டன் கூடுதலாகும்.

+ கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சாகுபடிப் பரப்பு 39.74 இலட்சம் எக்டராக உயர்ந்ததால், நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் அதிகளவு மகசூல் கிடைத்துள்ளது.

+ டெல்டா பகுதியில் கடந்தாண்டு குறுவை சாகுபடிப் பரப்பான 4.96 இலட்சம் ஏக்கர் என்பது, கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அதிகளவு நெல் சாகுபடிப் பரப்பாகும்.

+ இதனால், 2020-21 ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 104 இலட்சம் மெட்ரிக் டன் நெல்லை விட, 2021-22 ஆண்டில் 120 இலட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த மகசூல் மற்றும் சாகுபடிப் பரப்பு கூடியதற்கான காரணங்கள்:

+ தமிழக அரசு, வேளாண்மைத் துறையை, வேளாண்மை- உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்தது.

+ வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தது.

+ உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு விதைகளை விவசாயிகளுக்கு வழங்கியது.

+ உற்பத்தியைப் பெருக்க, விதைகள், பிற இடுபொருள்கள் மற்றும் இயந்திரங்களை மானிய விலையில், சரியான காலத்தில் வழங்கியது.

+ வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் மூலம், தொழில் நுட்பப் பயிற்சிகள் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு அறிவுரைகளை, செயல் விளக்கங்கள் மூலம் உரிய காலத்தில் வழங்கியது.

+ நெல் சாகுபடியை ஊக்கப்படுத்த, டெல்டா பகுதியில், குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

+ தார்பாலின், ஜிங்க் சல்பேட், ஜிப்சம், உயிர் உரங்கள், வேளாண் கருவிகள் ஆகிய மிகவும் அவசியமான பொருள்களை மானிய விலையில் வழங்கியது.

+ மாற்றுப் பயிர்களான சிறு தானியங்கள், பயறு வகைகள், நெல் தரிசில் பயறு வகைகள் சாகுபடி ஆகியவற்றை விவசாயிகளிடம் பரவலாக்கம் செய்வதற்காக, மாநில மற்றும் மாவட்ட அளவில் கருத்தரங்குகளை நடத்தியது.

+ சாகுபடிப் பரப்பைக் கூட்டுவதற்காக, மிகமிக அவசியமான 1.5 இலட்சம் மின் இணைப்புகளை வழங்கியது.

+ மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது.

நன்றி

இந்த வரலாற்றுச் சாதனைகளை அடைய உறுதுணையாக இருந்த, அனைத்து விவசாயப் பெருமக்களுக்கும், விரிவாக்கப் பணியாளர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் மனமார்ந்த நன்றி! இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


மு.உமாபதி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading