தமிழில், ஓர் பூடு, வங்காரவச்சி என்று கூறப்படும் கீரை வகையின் தாவரப் பெயர், செசுவியம் போர்டுள கேஸ்ட்ரம் (Sesuvium portulacastram) ஆகும்.
இது, எய்சோயேசியே (Aizoaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதை ஆங்கிலத்தில் Sea pursiane என்று கூறுவர்.
+ இந்த ஓர் பூடு அல்லது வங்காரவச்சி என்பது, உப்பு மண்ணில் வளரும் கீரை வகைச் செடியாகும்.
+ இதை, உப்பு மற்றும் ஆலைக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட மண்ணைச் சீர்திருத்தப் பயன்படுத்தலாம்.
+ இது, தண்டுகள் மூலம் பயிரிடப்படுகிறது.
+ ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை, 15 சென்ட் நாற்றங்காலில், 5×5 செ.மீ. இடைவெளியில் பயிரிட்டுத் தயார் செய்யலாம்.
+ பிறகு, 20×20 செ.மீ. இடைவெளியில் நடவு செய்து, 90 நாட்களில், 5 டன் பயிர்ப் பகுதிகளைப் பெறலாம்.
+ இதன் மூலம் உவர் தன்மையைச் சரி செய்யலாம். இவ்வகையில், ஒரு எக்டரில் உள்ள 157 கிலோ உப்பை அகற்றலாம்.
மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவரை, 0422- 6611252 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
செய்தி: செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
சந்தேகமா? கேளுங்கள்!