பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர் poochi virathi

யிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம்.

வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0 சதம் உள்ளதால், நன்செய் நிலங்களுக்கு உரமாக இடலாம்.

நெல், சோளம் போன்ற தானியங்களில், உலர்ந்த வேப்பிலைகளை 2-10 சதம் சேர்த்துச் சேமித்து வைத்தால், வண்டுகளின் தாக்குதல் இருக்காது.

வேப்பிலைச்சாறு கரைசல்: ஒரு கிலோ வேப்பிலையை அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டிப் பயன்படுத்தலாம். இந்தச் சாறுடன் இரு மடங்கு நீரைக் கலந்து தெளித்தால், காய்கறிப் பயிர்களைத் தாக்கும் புழுக்கள், வண்டுகள், லோகஸ்ட் என்னும் வெட்டுக் கிளிகள் போன்றவை கட்டுப்படும்.

ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்பிலைச் சாறு வீதம் கலந்து தெளித்தால், பூச்சிகளின் உண்ணும் தன்மையைத் தடுத்துப் பயிர்களைப் பாதுகாக்கலாம்.

வேப்பங் கொட்டைக் கரைசல்: ஏக்கருக்கு, பத்து கிலோ வேப்ப விதைகள் வீதம் எடுத்து, நன்கு தூளாக்கி 20 லிட்டர் நீரைச் சேர்த்து, ஒரு நாளைக்கு ஊற வைக்க வேண்டும்.

பிறகு, வடிகட்டி, 200 லிட்டர் நீரைச் சேர்த்துக் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இதனால், பயிர்களைத் தாக்கும், கம்பளிப் புழு, அசுவினி, தத்துப்பூச்சி, வெட்டுக்கிளி, புகையான், இலைச் சுருட்டுப் புழு, ஆனைக் கொம்பன், கதிர் நாவாய்ப் பூச்சி ஆகியன கட்டுப்படும்.

மூன்று சத வேப்ப எண்ணெய்க் கரைசல்: மூன்று லிட்டர் வேப்ப எண்ணெய், 200 மி.லி. ஒட்டும் திரவம் அல்லது காதி சோப், 200 லிட்டர் நீர் ஆகியவற்றைக் கலந்து தெளித்தால், பயிர்களைத் தாக்கும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் ஆகியன கட்டுப்படும். நிலக்கடலையைத் தாக்கும் துருநோய், இலைப்புள்ளி நோய் ஆகியன சிறந்த முறையில் கட்டுப்படும்.

வேப்பம் புண்ணாக்கு: இதில், தழைச்சத்து 5.2 சதம், மணிச்சத்து 1.1 சதம், சாம்பல் சத்து 1.5 சதம் உள்ளன. இந்தக் கரைசலைத் தெளித்தால், கத்தரியைத் தாக்கும் சல்லடை வண்டு என்னும் கத்தரி இலைகளைச் சுரண்டும் வண்டுகள் கட்டுப்படும்.

வேப்பம் பொருள்களைத் தெளித்தால், பூசண நோய்கள், பயறு வகைகளைத் தாக்கும் தண்டுப் புழுக்கள், காய்ப் புழுக்கள் ஆகியன கட்டுப்படும். நொச்சி,

வேப்பிலைக் கரைசல்: 5 கிலோ நொச்சித்தழை, 5 கிலோ வேப்பிலையை, ஒரு பானை நீரில் இட்டுக் கொதிக்க விட்டுக் கூழாக்கி, ஒருநாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும்.

பிறகு, இதை வடிகட்டி 100 லிட்டர் நீரில் கலந்து ஒரு ஏக்கரில் உள்ள நெற்பயிரில் தெளித்தால், இலைச் சுருட்டுப் புழுக்கள், குருத்துப் புழுக்கள், கதிர் நாவாய்ப் பூச்சிகள் கட்டுப்படும்.

இந்தத் தழைகளை அரைக்கும் வசதி இருந்தால், கொதிக்க வைக்கத் தேவையில்லை. இந்த இருவகை இலைகளையும் தனித்தனியாக அரைத்துப் பூச்சி விரட்டிகளாகப் பயன்படுத்தலாம்.


பயிர் Narayanan e1645014878842

ப.நாராயணன், தொழில் நுட்ப வல்லுநர், வேளாண்மை அறிவியல் நிலையம், கீழ்நெல்லி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading