பாஸ்போ பாக்டீரியா!

பாஸ்போ பாக்டீரியா paspo bacteria

பாஸ்போ பாக்டீரியா, மணிச் சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குத் தரும் உயிர் உரமாகும்.

மணிச்சத்து, மண்ணில் பல்வேறு வேதி மாற்றங்களுக்கு உட்பட்டு, பயிர்களுக்குக் கிட்டாத நிலைக்குச் சென்று விடுகிறது.

அதாவது, அமிலவகை மண்ணில் இந்த மணிச்சத்து, இரும்பு மற்றும் அலுமினிய அயனிகளுடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடுகிறது.

அதப்போல, காரவகை மண்ணில் கால்சியம் மற்றும் மக்னீசியத்துடன் இணைந்து, அவற்றின் பாஸ்பேட்டுகளாக மாறி விடுகிறது.

இத்தகைய பாஸ்பேட்டுகளைப் பயிர்களால் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது போன்ற சூழலில், மணிச்சத்தைக் கரைத்துப் பயிருக்குத் தருவதில், பாஸ்போ பாக்டீரியா முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நுண்ணுயிரிகள் தங்களின் செல்களில் இருந்து சுரக்கும் ஃப்யூமாரிக், சக்ஸீனிக் போன்ற அங்கக அமிலங்கள் மூலம்,

பயிர்களுக்குக் கிட்டாத நிலையிலும், கரையாத நிலையிலும் மண்ணில் உள்ள மணிச்சத்தைக் கரைத்து, பயிர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்கின்றன.

மேலும், பாஸ்படேஸ் என்னும் நொதிப் பொருளைச் சுரந்து மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு வழங்குகின்றன.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading