My page - topic 1, topic 2, topic 3

நுண்ணுயிர் உரங்கள்!

நுண்ணுயிர் உரங்களான அசோஸ் பயிரில்லம், பாஸ்போ பாக்டீரியா, ரைசோபியம், நீலப்பச்சைப் பாசி, அசோலா, வி.ஏ.மைக்ரோரைசா ஆகியன பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்த நுண்ணுயிர்கள் காற்று வெளியிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்குத் தருகின்றன.

மேலும், வேரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்கு அளிக்கின்றன.

பயறுவகைப் பயிர்களான பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, கொண்டைக் கடலை, சோயா மொச்சை,

நிலக்கடலை மற்றும் தீவனப் பயிர்களுக்கு ரைசோபியம் பயன்படுகிறது.

பருத்தி, நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, புகையிலை, மல்பெரி, பழமரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு அசிட்டோபேக்டர் பயன்படுகிறது.

நெல், கரும்பு, கம்பு, சோளம், எண்ணெய் வித்துகள், காய்கறிப் பயிர்கள், பழமரங்கள், பூச்செடிகளுக்கு அசோஸ் பயிரில்லம் பயன்படுகிறது.

நெல்லுக்கும் வாழைக்கும் நீலப்பச்சைப் பாசி பயன்படுகிறது. நெல்லுக்கு அசோலா பயன்படுகிறது.

எல்லாப் பயிர்களுக்கும் வி.ஏ.மைக்கோரைசா பயன்படுகிறது.

இந்த நுண்ணுயிர் உரங்கள் பல நிலைகளில் பயிர்களுக்குப் பயன்படுகின்றன.

அவை: விதை நேர்த்தி செய்தல், நேரடியாக மண்ணில் இடுதல், நுண்ணுயிர்க் கரைசலில் நாற்றுகளை நனைத்தல், வேளாண் கழிவுகளை மட்க வைக்கப் பயன்படுத்துதல்.

நுண்ணுயிர் உரங்களின் சிறப்புகள்: குறைந்த விலையில் கிடைத்தல். காற்று மண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தைக் கிரகித்துப் பயிர்களுக்கு அளித்தல்.

மண்ணில் பயிர்களின் வேர்ப் பகுதியில் கரையாத நிலையில் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்துப் பயிர்களுக்குக் கிடைக்கச் செய்தல்.

மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் பெருக்கத்தை ஊக்கப் படுத்துதல். பயிர் வளர்ச்சியில்,

மகசூலைக் கூட்டுவதில், பெரும்பங்கு வகித்தல்.

நுண்ணுயிர் உரங்களின் பொருளாதாரக் கணக்கு: ஆய்வுகள் அடிப்படையில், ஒரு கிலோ ரைசோபியம் நூறு கிலோ தழைச்சத்து,

அதாவது, 217 கிலோ யூரியாவுக்குச் சமமாகிறது.

ஒரு கிலோ அசோஸ் பயிரில்லம் நாற்பது கிலோ தழைச்சத்து, அதாவது, 86.8 கிலோ யூரியாவுக்குச் சமமாகிறது.

ஒரு கிலோ நீலப்பச்சைப் பாசி இரண்டு கிலோ தழைச்சத்து, அதாவது 4.3 கிலோ யூரியாவுக்குச் சமமாகிறது.

எனவே, நுண்ணுயிர் உரங்களைப் பயன்படுத்திச் செயற்கை உரங்களைக் குறைப்போம்;

செயற்கை உரங்களை வாங்கும் செலவைக் குறைப்போம்; மண்வளத்தைக் காப்போம்; அதிக மகசூலைப் பெறுவோம்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks