My page - topic 1, topic 2, topic 3

மாடுகள் சினைப் பிடிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்!

கிடேரிகள் 18 மாதங்களில் சினைப்பருவ நிலையை அடைய வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதற்கு, சத்துக் குறைவு, எடைக் குறைவு, முறையற்ற பராமரிப்பு,

தட்ப வெப்ப வேறுபாடுகள், உள் மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணிகள், உடல் சுரப்பிகளின் குறைவு நிலை ஆகியன காரணங்களாக உள்ளன.

மேலும், கருப்பைப் பாகங்களின் வளர்ச்சிக் குறைந்தாலும் சினைத் தங்குதல் பாதிக்கப்படலாம்.

கருத்தரித்த பிறகு, கருவானது கருப்பையில் நிலை கொள்ளாமல் வெளியே தள்ளப் படுவதால் கருத்தரியாமை ஏற்படுகிறது.

இப்படி, ஒரு கரு அழிந்தால், அந்தப் பசு மீண்டும் எப்போதும் போல, 18-26 நாட்களில் சினைக்குத் தயாராகி விடும்.

ஆனாலும், இதனால் ஈற்றுக்காலம் தள்ளிப் போவதால், பொருளாதார இழப்பு ஏற்படும்.

இனப்பெருக்கத் திறனைப் பெருக்கும் வழிமுறைகள்: பண்ணையில் உள்ள கறவை மாடுகள் சினைக்கு வந்த நாள்,

கருவூட்டல் செய்த நாள், ஈன்ற நாள் போன்ற விவரங்களைத் துல்லியமாகக் குறித்து வைக்க வேண்டும்.

கிடேரிகளில், பசுக்களில் சினைப் பருவம் தெரிகிறதா என, தினமும் கவனிக்க வேண்டும்.

பெரிய பண்ணைகளில், சினைக்கு வரும் பசுக்களை அடையாளம் காட்ட வீரியம் நீக்கப்பட்ட காளைகளைப் பயன்படுத்தலாம்.

மாடுகளின் நலம், இனப்பெருக்க நிலை மற்றும் பிற பாதிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனப்பெருக்க உறுப்பில் சீழ் அல்லது நீர் வடிந்தால், மூன்று முறைக்குப் பின்னும் சினைப் பிடிக்காமல் இருந்தால், உடனே அந்த மாட்டை, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை செய்ய வேண்டும்.

கரூவூட்டல் செய்யப்பட்ட மாடு சினையாகி விட்டதா என்பதை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும்.

பண்ணைக்குத் தேவையான மாடுகளை, தெரிந்த இடத்தில் இருந்தும், நல்ல மந்தைகளில் இருந்தும் வாங்க வேண்டும். அதுவும் முறையாகப் பரிசோதித்த பின்பே வாங்க வேண்டும்.

ஈனுமிடம் தனியாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். ஈற்று முடிந்ததும் அந்த இடத்தைச் சுத்தப்படுத்தி, தாயையும் சேயையும், நல்ல சூழலில் பராமரிக்க வேண்டும்.

பண்ணை சுகாதாரமாக இருக்க வேண்டும். நல்ல கொட்டகை வசதி இருக்க வேண்டும்.

எருமை மற்றும் பசுக்களில் இனப்பெருக்கம் சரியாக நடக்க வேண்டும் என்றால், உரிமையாளரின் கவனம் முழுவதும் பண்ணை மீதே இருக்க வேண்டும்.


மரு.ஜெ.உமா மகேஸ்வரி.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks