கிருஷ்ணகிரி விவசாயிகள் நன்மைகருதி வாகனப் பிரச்சாரம்!

கிருஷ்ணகிரி IMG 20230921 WA0218 d3a47ab0b6af867ff64f31fb125af356

கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழையைப் பயன்படுத்தி, சிறுதானியப் பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்றவற்றையும், பயறு வகைப் பயிர்களான உளுந்து, காராமணி, கொள்ளு போன்றவற்றையும் விதைக்கலாம் என்பதால், தரிசாக உள்ள நிலங்களிலும், ஊடுபயிர் செய்யாமல் உள்ள நிலங்களிலும் விதைத்து, கூடுதல் மகசூலைப் பெற்று பயனடையலாம்.

சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்கள் சாகுபடிக்கான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுரங்கள், உயிர் எதிர்க் காரணிகள் போன்றவை, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

சத்தான மற்றும் நஞ்சில்லா உணவுக்குப் பயறு வகைகள், சிறுதானியங்கள் மிகவும் அவசியம் என்பதால், இந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய மாநில அரசுகள், உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்னும் திட்டத்தின் கீழ் மானியங்களை வழங்கி வருகின்றன.

இந்த விவரம், கிருஷ்ணகிரி வட்டாரம் முழுவதும் வாகனங்களில் ஒலிப் பெருக்கியை வைத்தும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அல்லது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகிப் பயன் பெறலாம்.

சரியான பருவம், தரமான விதைகள் மற்றும் சீரான தொழில் நுட்பங்களைப் பின்பற்றி, கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகள் நன்முறையில் விவசாயம் செய்து கூடுதல் இலாபம் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading