மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசகி, யுவராணி, யஸ்வினி, யுவஸ்ரீ, இரவிக்குமார் ஆகியோர், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சிக்காக, அருப்புக்கோட்டைப் பகுதியில் முகாமிட்டு உள்ளனர்.
இவர்கள், பயிற்சியின் ஒரு பகுதியாக, செம்பட்டி முத்துக்குமார் என்னும் இயற்கை விவசாயியின் தோட்டத்தில், மண் பரிசோதனைக்கான மண் மாதிரிகளை எடுக்கும் முறையைப் பற்றி விளக்கம் அளித்தனர்.
அப்போது, இப்பகுதியில் எடுக்கப்படும் மண் மாதிரிகள், அருப்புக்கோட்டையில் உள்ள நடமாடும் மண் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்படும் என்றும், மாதிரிகளை அனுப்பி, மூன்று முதல் ஐந்து நாட்களில், மண் மாதிரி முடிவுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், விவசாயிகள் அனைவரும், அவரவர் நிலத்தின் நிலையை அறிந்து, தேவையான உரங்களை மட்டும் இட்டு, அதிக மகசூலைப் பெற, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மண் பரிசோதனையைத் தவறாமல் செய்ய வேண்டும் என்றும், ஒரு மண் மாதிரிக்கான கட்டணம் முப்பது ரூபாய் மட்டுமே என்றும் எடுத்துக் கூறினர்.
முனைவர் ப.ஆர்த்திராணி, உதவிப் பேராசிரியர், வேளாண் வானிலைத் துறை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.
சந்தேகமா? கேளுங்கள்!