My page - topic 1, topic 2, topic 3

கரிசல் நிலம்!

ரிசல் மண், மழைநீரை அதிகக் காலம் வரையில் தேக்கி வைக்கும். எனவே, இந்நிலத்தில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம்.

மானாவாரிக் கரிசலில், சப்போட்டா, சீமை இலந்தை, இலந்தை, வில்வம், கொடுக்காய்ப்புளி போன்ற, வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை வளர்க்கலாம்.

ஆனால், கோடையில் கரிசலில் ஏற்படும் வெடிப்புகளால், அதிகளவு நீர் ஆவியாகும்.

மானாவாரியில் விதைக்கும் தானியம் மற்றும் பயறு வகைகளின் முளைப்புத் திறன், பெய்யும் மழையைப் பொறுத்தே இருப்பதால், விதைகள் தேவை சற்று அதிகமாகும்.

சோளத்தை ஊடுபயிராகப் பயிரிட ஏக்கருக்கு 4-5 கிலோ விதை தேவைப்படும்.

மக்காச் சோளம் என்றால், 5-6 கிலோ விதை தேவைப்படும்.

கம்பு, தினை, சாமை, கேழ்வரகு என்றால், ஏக்கருக்கு 1-2 கிலோ விதை தேவை.

பயறு வகைகள் எனில், ஏக்கருக்கு 5-6 கிலோ விதை தேவைப்படும்.

இப்போது கரிசலில் வெள்ளரி, தர்ப்பூசணி, முலாம்பழம் போன்ற, பூசணி வகைகள் பயிரிடப் படுகின்றன.

மேலும், மூலிகைப் பயிர்களான நித்திய கல்யாணி, அவுரி, மருந்துக் கத்தரி, கீழாநெல்லி, சோற்றுக் கற்றாழை போன்றவையும் நன்கு வளரும்.

தீவனச் சோளம், தீவனக் கம்பு, கொழுக்கட்டைப் புல் மற்றும் தீனாநாத் புல்லையும் பயிரிடலாம்.

பழமரப் பயிர்களை நட்ட நிலத்தில், முதல் மூன்று ஆண்டுகள் வரை ஊடுபயிரை சாகுபடி செய்தால் நல்ல மகசூலைப் பெறலாம்.

தானியப் பயிர்களை 45×15 செ.மீ. இடைவெளியில் விதைக்கலாம். சீரான விதைப்புக்கு விதைப்புக் கருவியைப் பயன்படுத்தலாம்.

தானியப் பயிர்கள் நன்கு முளைத்து நல்ல ஈரம் இருக்கும் போது உரமிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும்


முனைவர் அ.சோலைமலை, இணைப் பேராசிரியர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி. 

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks