தைத் திருநாளையொட்டி வேலூரில் வரும் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி மாபெரும் மரபுக் காய்கறி மற்றும் கிழங்குத் திருவிழா நடைபெற உள்ளது. திருப்பதி தேவஸ்தானம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில், காலை 9 முதல் மாலை 4 மணி வரை திருவிழா நடைபெற இருக்கிறது.
இரண்டாவது ஆண்டாக, தமிழ்நாடு விதைச் சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடக்கும் இந்த விழாவின் நோக்கம், அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற உணவை அளிப்பது என்பதாகும்.
விழாவில் 800க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் கிழங்கு ரகங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். எனவே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். அனுமதி இலவசம்.
காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவில் கடைகள் அமைத்திட, +91 94451 88965 என்ற எண்ணில் பேசலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, 63817 43538 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
சந்தேகமா? கேளுங்கள்!