மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

பயறுவகைப் பயிர் payir

ண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும்.

+ இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்துகின்றன.

+ ஒரு பயிர்ப் பருவம் முடிவுற்ற பிறகு, இந்த மூடுபயிர், மண்ணின் மேற்பரப்பை மூடிக் கொள்வதால், களை முளைப்புத் தடை செய்யப் படுகிறது.

+ மேலும், களைக் கொல்லிக்குக் கட்டுப்படாத களைச் செடிகளைக் குறைப்பதன் மூலம், மூடுபயிர்கள் ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் முக்கியப் பங்காற்று கின்றன.

+ மூடுபயிராக இடப்படும் தட்டைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 30-40 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

+ மூடுபயிராக இடப்படும் சோயா மொச்சை, ஒரு எக்டர் நிலத்தில், 50-150 கிலோ தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது.

+ மூடுபயிராக இடப்படும் கொண்டைக் கடலை, ஒரு எக்டர் நிலத்தில், 24-84 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

+ மூடுபயிராக இடப்படும் பச்சைப் பயறு, ஒரு எக்டர் நிலத்தில், 71-112 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.

+ மூடுபயிராக இடப்படும் துவரை, ஒரு எக்டர் நிலத்தில், 150-280 கிலோ தழைச் சத்தை நிலை நிறுத்துகிறது.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading