கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் நடத்தும் மரபுச் சந்தை!
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாயிகள் இணைந்து வாரந்தோறும் மரபுச் சந்தை என்ற பெயரில் வாரச் சந்தையை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில், 96 ஆவது வாரச் சந்தை, கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள அம்மா பூங்கா அருகே அமைந்திருக்கும் BRC பள்ளி மைதானத்தில் நாளை (டிசம்பர் 31) நடைபெற இருக்கிறது.
இந்த சந்தையில் பாரம்பரிய அரிசி, காய்கறி, பழங்கள், பருப்பு வகைகள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள், மசாலா வகைகள், தேன், பசு நெய் மற்றும் விளை பொருள்களால் மதிப்புக் கூட்டப்பட்ட திண்பண்டங்கள் என, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே சந்தை நடைபெறும் என்பதால், அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பொருட்களை வாங்கிச் செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: 99438 04381, 86104 42474
குறிப்பு: பச்சை பூமி – இயற்கை வேளாண்மை, சூழல் மேலாண்மைக்கான மாத இதழின் இந்த இணையதளத்துக்கு வேளாண் செய்திகள் வரவேற்கப்படுகின்றன. தகுந்த விவரங்கள் மற்றும் புகைப்படத்துடன் தகவல்களை pachaiboomi@live.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பினால், உண்மை, தன்மை சரிபார்க்கப்பட்டு செய்தி வெளியிடப்படும்.
சந்தேகமா? கேளுங்கள்!