My page - topic 1, topic 2, topic 3

மாவட்ட ஆட்சியருடன் வேளாண் மாணவியர் கலந்துரையாடல்!

துரை வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியரான பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசுகி, யஸ்வினி, யுவராணி, யுவஸ்ரீ ஆகியோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலனைச் சந்தித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவரும் மதுரை வேளாண்மைக் கல்லுரியில் பயின்றவர் என்பதால், தற்போது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்ட மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த உரையாடலில், மாணவியரின் திட்டப் பணிகளை விசாரித்துடன், வேளாண்மைத் தொழில் நுட்பங்களின் பரவலாக்கம் குறித்தும், அதன் நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

வேளாண்மையின் எதிர்காலம் குறித்தும், மாணவர்களுக்கான அரிய வேலை வாய்ப்புகள் குறித்தும், முக்கியப் போட்டித் தேர்வுகள் குறித்துமான வழிகாட்டுதல்களை வழங்கினார். முதுகலை மேற்படிப்புத் திட்டங்களைக் கேட்டறிந்த அவர், பல்வேறு மக்களுக்குப் பெரிதும் அறியப்படாத தேர்வுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வழங்கினார்.

இந்தக் கலந்துரையாடல் மூலம், வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகள் குறித்த விழிப்புணர்வை மாணவியர் பெற்றனர்.


முனைவர் ப.ஆர்த்திராணி, உதவிப் பேராசிரியர், வேளாண் வானிலைத் துறை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks