பச்சை பூமி சார்பில், இரண்டாம் முறையாகப் பொள்ளாச்சியில், பிப்ரவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் மாபெரும் விவசாயக் கண்காட்சி, சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது. மூன்று நாட்களும் பல்லாயிரம் விவசாயிகள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்த்துப் பயனடைந்தனர்.
+ இந்தக் கண்காட்சியில், டிராக்டர் நிறுவனங்கள் அரங்குகளை அமைத்து இருந்தன.
+ ரொட்டோவேட்டர் போன்ற உழவுக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
+ தென்னை மட்டை, தென்னையோலைத் தூளாக நொறுக்கி உரமாக, தீவனமாக மாற்றுவதற்கு உதவும் இயந்திரங்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
+ சூரிய மின்சாரத்தில் இயங்கும் கருவிகள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
+ விவசாய வேலைகளுக்குத் தேவையான அரிவாள், மண்வெட்டி, கொத்து உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.
+ பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடையும் வகையிலான அரங்கு இடம் பெற்று இருந்தது.
+ வாழை போன்ற பயிர்களில் இருந்து கிடைக்கும் கழிவை, பயன்மிகு பொருள்களாக மாற்றவும் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வகை செய்யும் அரங்கு இந்தக் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.
+ வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்கத் தேவைப்படும் நாட்டு விதைகள், நவீன விதைகள் மற்றும் இடுபொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.
+ மண்ணையும் காத்து, மனித நலத்தையும் காக்கும் இயற்கை வேளாண்மைக்கு உதவும், இயற்கை உரங்கள் நிறைந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
+ பயிர்களைக் காக்க உதவும், நவீனச் சூரிய மின்வேலி மற்றும் கம்பிவேலி தயாரிப்பு நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.
+ எளிய வகையில் உடல் நலம் காக்கும் மூலிகை மருத்துவப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் இருந்தன.
+ தென்னை, மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, பலா, மாதுளை போன்ற பழமரக் கன்றுகள், தேக்கு, சந்தனம், மகாகனி போன்ற பணமதிப்புள்ள மரக்கன்றுகள் அடங்கிய நாற்றுப் பண்ணைகளின் அரங்குகள் இடம் பெற்று இருந்தன.
+ அரசு நலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
+ கண்காட்சியில், பொள்ளாச்சி நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 15 பேர், தன்னார்வலர்களாகப் பணியாற்றினர். அவர்களுக்குப் பச்சை பூமியின் பாராட்டுச் சான்றிதழை, பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொ.முருகானந்தம் வழங்கினார்.
+ இந்தக் கண்காட்சியில் சிற்றுண்டி மற்றும் உணவு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
+ மொத்தத்தில், ஏராளமான அரங்குகளுடன், எந்தக் குறையும் இல்லாமல், கண்காட்சியில் பங்கேற்ற அனைவரும் மனநிறைவைப் பெறும் வகையில், இந்தக் கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தது.
பச்சை பூமி
சந்தேகமா? கேளுங்கள்!