பூச்சி மேலாண்மையில் ஊடுபயிர்கள்!

பூச்சி

செய்தி வெளியான இதழ்: 2018 ஏப்ரல்.

யிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. மருந்துகளை எதிர்க்கும் திறனைப் பூச்சிகள் பெறுகின்றன. உணவுப் பொருள்களில் நச்சுத் தன்மை உண்டாகிறது.

நிலத்தடி நீர் கெட்டுப் போகிறது. இதனால், மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறைந்து வருகின்றன. இதற்கெல்லாம் ஒரே தீர்வு, இயற்கை வேளாண்மை தான்.

அந்த வகையில், முக்கியப் பயிருடன் சேர்த்துப் பயிரிடப்படும் ஊடுபயிர், அதிக மகசூலுக்குக் காரணமாக இருக்கிறது. இதனால், கூடுதல் வருமானம் கிடைக்கிறது. களைகளை, பூச்சிகளைக் கட்டுப்படுத்த முடிகிறது. மண்வளத்தை மேம்படுகிறது.

எனவே, எந்தப் பயிரில், எந்தப் பயிரை ஊடுபயிராக இட்டால், எந்தெந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நிலக்கடலையில்: தட்டைப்பயறு, சிவப்புக் கம்பளிப்புழு கட்டுப்படும்.

நிலக்கடலையில்: கம்பு, சுருள் பூச்சி, இலைப்பேன் கட்டுப்படும்.

துவரை, பாசிப்பயறில்: சோளம், காய்ப்புழு கட்டுப்படும்.

பருத்தியில்: சூரியகாந்தி, பச்சைத் தத்துப்பூச்சி கட்டுப்படும்.

பருத்தியில்: பாசிப்பயறு, உளுந்து, ஆமணக்கு, சோயா, பருத்தியைத் தாக்கும் பூச்சிகள் கட்டுப்படும்.

மக்காச்சோளத்தில்: ஆமணக்கு, புரொட்டீனியா புழு கட்டுப்படும்.

மக்காச்சோளத்தில்: சோளம், குருத்து ஈ, தண்டுத் துளைப்பான் கட்டுப்படும்.

முட்டைக்கோசில்: தக்காளி, வைரமுதுகு அந்துப்பூச்சி, இலைப்புழு கட்டுப்படும்.

முட்டைக்கோசில்: கொத்தமல்லி, அசுவினி கட்டுப்படும்.

சோளத்தில்: அவரை, சோளத்தண்டுப் புழு கட்டுப்படும்.

கரும்பில்: தக்கைப்பூண்டு, கரும்புத் தண்டுத் துளைப்பான் கட்டுப்படும்.

கத்தரியில்: கொத்தமல்லி, தண்டு மற்றும் காய்ப்புழு கட்டுப்படும்.

பாகலில்: மக்காச்சோளம், பழ ஈ கட்டுப்படும்.

வெண்டையில்: கொத்தமல்லி, சாமந்தி, தண்டு மற்றும் காய்ப்புழு கட்டுப்படும்.

வெள்ளரியில்: மக்காச்சோளம், வண்டு கட்டுப்படும்.

தட்டைப்பயறில்: சோளம், அசுவினி, இலைப்பேன் கட்டுப்படும்.


Pachai boomi DR GAYATHIRI

முனைவர் காயத்ரி சுப்பையா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading