My page - topic 1, topic 2, topic 3

பயிர்க்கழிவை மட்க வைக்கும் பூசா டி கம்போசர் குப்பி!

பயிர்

பூசா டி கம்போசர் என்பது, பயிர்க் கழிவை உரமாக மாற்றும் நோக்கில், தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்த, தொழில் நுட்பம் ஆகும்.

+ இது, அனைத்துப் பயிர்க் கழிவுகள், சமையல் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகளை உரமாக மாற்றப் பயன்படுகிறது.

+ ஐந்து மெட்ரிக் டன் பண்ணைக் கழிவை உரமாக மாற்ற, நான்கு பூசா டி கம்போசர் குப்பிகள் போதுமானது.

+ இந்தக் கரைசலை உற்பத்தி செய்து பயன்படுத்த, 12 நாட்கள் ஆகும்.

+ முதலில் 150 கிராம் வெல்லத்தை ஐந்து லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆற விட்டு, 50 கிராம் உளுந்து மாவைச் சேர்க்க வேண்டும்.

+ அடுத்து, இதில் டி கம்போசர் குப்பிகளைக் கலந்து, நுண்ணுயிரிகள் பெருகுவதற்காக, நான்கு நாட்கள் வைத்திருக்க வேண்டும்.

+ பிறகு, 5 லிட்டர் நீரில் 150 கிராம் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆற விட்டு, முதல் கரசலில் சேர்க்க வேண்டும்.

+ 25 லிட்டர் கரைசல் கிடைக்கும் வரை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, இப்படிச் செய்ய வேண்டும்.

+ பிறகு, இந்த 25 லிட்டர் கரைசலை, 475 லிட்டர் நீரில் கலந்து, ஒரு எக்டர் நெல் வைக்கோல் அல்லது விவசாயக் கழிவை அப்படியே வயலில் போட்டு அதன் மீது தெளிக்க வேண்டும்.

+ நிலத்தில் போதிய ஈரம் இருக்க வேண்டும். இதன் மூலம், 25 நாளில் அனைத்துப் பயிர்க் கழிவும் மட்கி மண்ணுக்கு உரமாகும்.

+ பூசா டி கம்போசரை, spilsry.in/product/pusa decomposer/ என்னும் இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். நான்கு குப்பிகள் அடங்கிய பாக்கெட்டின் விலை 315 ரூபாய் ஆகும்.


செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks