போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம்.
+ போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து, மொரமொரப்பாக இருக்கும். நடுத்தண்டின் நுனிக் குருத்துக் கருகும்.
+ கடலைக் காய்களின் தோலில் கரும் புள்ளிகள் தோன்றும். பருப்புச் சிறுத்து விடும், பொக்குக் கடலைகள் அதிகமாகும்.
+ பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் இருக்கும்.
+ விதையின் கருக்குருத்து பழுப்பு நிறமாக மாறிக் கருகி விடும். இதை, Hollow heart என்று சொல்வார்கள்.
சரி செய்தல்
+ போரான் சத்துக்குறை உள்ள நிலத்தில், எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.
+ ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.
சந்தேகமா? கேளுங்கள்!