திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநர் காளிமுத்து அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், நிலக்கோட்டைப் பகுதியில், கிராமப்புறத் தோட்டக்கலை அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள, பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வேளாண்மைத் துணை இயக்குநர் பேசுகையில், அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடம் வர வேண்டும். ஏனெனில், அங்கக வேளாண்மை மூலம் விளையும் பொருள்களுக்கு மதிப்பும் நல்ல விலையும் கிடைக்கும். மேலும், அங்கக வேளாண்மை மூலம், விளைநில வளமும், சுற்றுச்சூழல் வளமும் பெருகும் என்றார்.
இதைத் தொடர்ந்து, அங்கக வேளாண்மையில் சாகுபடி முறைகள், பூச்சி, நோய் நிர்வாக முறைகள், இயற்கை உரப் பயன்பாடு போன்றவற்றைக் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், கூட்டரங்கு பயனுள்ளதாக இருந்தது என்றும், இங்கே கிடைத்த தகவல்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்போம் என்றும் கூறினர்.
தகவல்: பயிற்சி மாணவர்கள்.
சந்தேகமா? கேளுங்கள்!