My page - topic 1, topic 2, topic 3

தீவன மர இலைகளில் உள்ள சத்துகள்!

அகத்தி

தீவனமாகப் பயன்படும் மரங்களின் இலைகளில் 20-40 சதம் உலர் பொருள் உள்ளது. மேலும், சினைப் பருவத்துக்கு முக்கியமாகக் கருதப்படும், வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.

இங்கே, முக்கியமான தீவன மரங்களின் இலைகளில் உள்ள சத்துகள் குறித்துப் பார்க்கலாம்.

சூபாபுல்: புரதம் 21 சதம், செரிமானச் சத்துகள் 68 சதம்.

வாகை: புரதம் 16 சதம், செரிமானச் சத்துகள் 50 சதம்.

கொடுக்காய்ப்புளி: புரதம் 20 சதம், செரிமானச் சத்துகள் 55 சதம்.

கிளைரிசிடியா: புரதம் 22 சதம், செரிமானச் சத்துகள் 65 சதம்.

கல்யாண முருங்கை: புரதம் 26 சதம், செரிமானச் சத்துகள் 60 சதம்.

அகத்தி: புரதம் 22 சதம், செரிமானச் சத்துகள் 65 சதம்.

சித்தகத்தி: புரதம் 24 சதம், செரிமானச் சத்துகள் 62 சதம்.

ஒதியன்: புரதம் 4 சதம், செரிமானச் சத்துகள் 66 சதம்.

வேம்பு: புரதம் 6 சதம், செரிமானச் சத்துகள் 55 சதம்.

கருவேல்: புரதம் 12 சதம், செரிமானச் சத்துகள் 45 சதம்.

வெள்வேல்: புரதம் 14 சதம், செரிமானச் சத்துகள் 45 சதம்.

ஆலிலை: புரதம் 12 சதம், செரிமானச் சத்துகள் 52 சதம்.

மரமல்லி: புரதம் 6 சதம், செரிமானச் சத்துகள் 62 சதம்.

பூவரசு: புரதம் 11 சதம், செரிமானச் சத்துகள் 60 சதம்.

பெருமரத்தழை: புரதம் 6 சதம், செரிமானச் சத்துகள் 63 சதம்.


தொகுப்பு: பசுமை

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks