உலகப் புவிநாளை முன்னிட்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், புலியூரான் வெள்ளாளர் நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தினர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, உலகப் புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வகையில், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் வெள்ளாளர் நடுநிலைப் பள்ளியில், உலகப் புவிநாள் கொண்டாடப்பட்டது.
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இறுதியாண்டு பயிலும் மாணவியரான, பொன்னுரி சுஸ்மா, எஸ்.சௌம்யா, பீ.உபகார ரோஸ்வின், என்.வர்த்தினி, ஜி.வாசுகி, இ.பஸ்வினி, பி.யுவராணி, யுவஸ்ரீ ரவிக்குமார் ஆகியோர், புவிநாள் குறித்தும், நிலம், நீர் மற்றும் காற்று மாசு குறித்தும், பள்ளி மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வில், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.காமாட்சி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர், உலகம் காப்போம் என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவாக, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
முனைவர் ப.ஆர்த்தி ராணி, உதவிப் பேராசிரியர் – வேளாண் வானிலைத் துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி – 628 501.
சந்தேகமா? கேளுங்கள்!