My page - topic 1, topic 2, topic 3

உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்கள்!

உற்பத்திக்கு உதவும் நானோ இடுபொருள்

ஞ்சற்ற விளை பொருள்கள் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில், தினமொரு உயிரியல் இடுபொருள், தொழில் நுட்பம் என வந்து கொண்டே உள்ளன. இவ்வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், விதைகளை நேர்த்தி செய்யப் பயன்படும், விகர் ப்ளஸ் என்னும் நானோ கரைசலை வெளியிட்டு உள்ளது.

விகர் ப்ளஸ்

இது, உயிரி பாலிமர் மற்றும் தாவர வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோனால் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை, ஒரு கிலோ விதைகளுக்கு 20-25 மி.லி. வீதம் எடுத்துக் கலந்து, அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

இப்படிச் செய்யும் போது, விதைகளின் முளைப்புத் திறன் மேம்படும். பயிர்கள் விரைவாக வளரும். இதன் விலை லிட்டர் 600 ரூபாயாகும்.

இனக்கவர்ச்சிக் குப்பி

இதுவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வெளியீடு தான். இந்தக் குப்பி, நெற்தண்டுத் துளைப்பானை, இயற்கை முறையில் கட்டுப்படுத்தும். ஆண் அந்துப் பூச்சிகளை அதிகளவில் கவரும் தன்மை மிக்கது.

ஒரு குப்பியின் செயல்பாடு, 11 வாரங்கள் வரை இருக்கும். நடவு முடிந்து 35 நாட்களுக்குப் பிறகு, எக்டருக்கு 12 குப்பிகள் வீதம் வைத்து, பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும்.

இதையே எக்டருக்கு 50 குப்பிகள் வீதம் வைத்தால், இதன் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு இனக்கவர்ச்சிக் குப்பியின் விலை 50 ரூபாயாகும்.

மேலும் விவரங்களுக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் நானோ தொழில் நுட்பம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்,

கோயம்புத்தூர்.

தொலைபேசி: 0422 6611520.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks