My page - topic 1, topic 2, topic 3

Articles

பருத்தி சாகுபடி!

பருத்தி சாகுபடி!

பருத்தி மிக முக்கிய வணிகப் பயிராகும். வேளாண்மை சார்ந்த தொழில் துறையில் முன்னிலை வகிக்கும் முக்கியமான பயிர் பருத்தி. இந்தியாவில் மலைப் பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் பரவலாகப் பருத்தி விளைகிறது. தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில்…
More...
படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப் புழுக்களைத் தொடக்க நிலையிலேயே கவனித்து, தடுப்பு வேலைகளைச் செய்தால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம். படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும். விதைப்புக்கு முன்,…
More...
மாடியில் மண்புழு உரம் தயாரிப்பு!

மாடியில் மண்புழு உரம் தயாரிப்பு!

மண்புழு உரம் தயாரிக்க உதவும் மாடி வீடு, மட்கும் கழிவுகள் இலை தழைகள், தாவரக் கழிவுகள், வேண்டிய அளவில் தாராளமாகக் கிடைக்கும் இடத்தில் இருப்பது நல்லது. கால்நடைக் கழிவு, குறிப்பாகப் பசுஞ்சாணம் அருகிலேயே கிடைக்க வேண்டும். மண்புழு உரத்தைப் பயன்படுத்த மற்றும்…
More...
  உளுந்து சாகுபடியில் பாலிமர் விதை நேர்த்தி!

  உளுந்து சாகுபடியில் பாலிமர் விதை நேர்த்தி!

இயற்கை பாலிமர்கள் ஈரத்தைத் தக்க வைக்கும் தன்மை மிக்கவை. எனவே, இந்த பாலிமர்களில் மானாவாரி உளுந்து சாகுபடி விதைகளை நேர்த்தி செய்து விதைப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த ஆய்வு, குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அகார்,…
More...
பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

உலகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510…
More...
பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்!

பாம்புகள் கடித்து இறப்போரின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பேர்கள் பாம்புக் கடியால் இறக்கிறார்கள். பெரும்பாலான பாம்புக்கடி இறப்புக்கு, மூட நம்பிக்கை வைத்திய முறைகளே காரணமாகும். தவறான வைத்திய முறைகள் பாம்பு கடித்த இடத்தில் இருக்கும் தசையை…
More...
பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

அறிகுறிகள்: பயிர்களில் குறைவான வளர்ச்சி, குறைவான தூர்கள் மற்றும் பக்கக் கிளைகள், இடைக்கணு நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இல்லாமல் பழுப்பு நிறமாக மாறுதல், இலையோரம் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிஃபிளவர் போன்ற அமைப்பு உருவாதல், இலை நுனி…
More...
வெறி நோயும் தடுப்பு முறையும்!

வெறி நோயும் தடுப்பு முறையும்!

ரேபிஸ் என்னும் வெறிநோய், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக் கூடிய நச்சுயிரி நோயாகும். விலங்குகள் மற்றும் மக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் முக்கிய நோயான இது, விலங்குகள் மூலம் பரவும். இந்த நச்சுயிரியால் பாதிக்கப்பட்ட விலங்கு கடிக்கும் போது, அதன் உமிழ்நீர்…
More...
பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் மற்றும் உயிர் உரங்களின் நன்மைகள்!

பசுந்தாள் உரப்பயிர்கள் காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து 70% வரை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண் வளமாக உதவுகின்றன. மண்ணரிப்பைத் தடுக்கும் பிடிப்புப் பயிராக, நிழற் பயிராக, மூடுபயிராக, தீவனப் பயிராகப் பயன்படு கின்றன. மண்ணில் கரிமப் பொருள்களை அதிகரிக்கச்…
More...
எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!

எந்த இடத்திலும் வைக்க உகந்த தேனீப்பெட்டி!

நமது நலமான வாழவுக்கு ஆதாரமாக, இயற்கைத் தேன், நெல்லிக்காய், எலுமிச்சை முதலியன உதவும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்தால் நீடித்த ஆயுள், நல்ல உடலமைப்பைப் பெறலாம். விவசாயிகள் அவரவர் தோப்பில் அல்லது தோட்டத்தில் தேனீப் பெட்டிகளை வைத்து, தேனீக்களை வளர்க்கலாம். இதில்…
More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது. இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பச்சைக் காய்த்…
More...
கலப்படப் பாலால் விளையும் தீமைகள்!

கலப்படப் பாலால் விளையும் தீமைகள்!

ஆக்சிடோசின் (oxytocin) என்னும் ஹார்மோனை, காதல் ஹார்மோன் (love hormone) என்பார்கள். தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளியே வருவதற்கு, நஞ்சுக்கொடி வெளியேற, பால் சுரக்க, இந்த ஹார்மோன் அவசியம். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதால், இந்த ஊசிமருந்து தடை செய்யப்பட்டு…
More...
அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

அரசின் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு!

வேலையாட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க, வேலைகளை விரைவாக முடிக்க, சாகுபடிச் செலவுகளைக் குறைக்க ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை, வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுகிறது. இந்த நல்ல வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். புல்டோசர்…
More...
ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்!

ஏலத்துக்கு வந்துள்ள விளைபொருள்கள்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், 12.03.2024 தேதிப்படி, கீழ்க்கண்ட விளை பொருள்கள் ஏலத்துக்கு வந்துள்ளன. ஆத்தூர் கிச்சடி சம்பா: 30 மூட்டை, காராமணி (தட்டைப்பயறு): 100 மூட்டை, மஞ்சள்: 500 கிலோ, துவரம் பருப்பு: 30 கிலோ, கருப்புக்கவுனி…
More...
பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

பனையேறிக் கெண்டை மீன் வளர்ப்பு!

பனையேறிக் கெண்டை மீன் (Anabas Koi) (Anabas testudineus) வட இந்திய மக்களின் மிக முக்கிய உணவு மீன்களில் ஒன்றாகும். இதன் சிறந்த சுவை மற்றும் இதிலுள்ள நோயெதிர்ப்புத் திறனால், பலதரப்பட்ட மக்களிடம் மிகவும் பிரபலமாக வாய்ப்பு உள்ளதாகக் கருதப் படுகிறது.…
More...
இறந்த கோழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவது எப்படி?

இறந்த கோழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவது எப்படி?

இப்போது பெரும்பாலான மக்கள் அசைவ உணவையே விரும்புகின்றனர். இறைச்சி யுணவில் கோழிக்கறியின் பயன்பாடு ஐம்பது சதமாகும். இதன் விலை குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம் ஆகும். எனவே, கறிக்கோழிப் பண்ணைகளும் பெருகி வருகின்றன. இந்தப் பண்ணைகளில் கோழிகள் இறப்பது ஐந்து…
More...
தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

தூதுவளை மற்றும் கற்றாழையின் நன்மைகள்!

தூதுவளையில் மிளகைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்தால், வறட்டு இருமல் குறையும். தூதுவளைப் பழங்களைக் காய வைத்து வற்றலாக்கி வதக்கிச் சாப்பிட்டால், கண் குறைகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பும் பற்களும் பலப்படும். அதனால், தூதுவளைக் கீரையுடன் பருப்பு,…
More...
தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

இந்தியாவில், தேன் மற்றும் மெழுகு உற்பத்தி உயிரினமாகவே தேனீக்கள் கருதப் படுகின்றன. ஆனால், இவற்றைத் தவிர, தேன் கூட்டிலிருந்து மகரந்தம், அரசகூழ், தேனீ நஞ்சு, பிசின் போன்ற மதிப்புமிகு பொருள்களும் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம். தேன் தேனீக்கள் மதுரத்தில்…
More...
சம்பா நெல் சாகுபடி!

சம்பா நெல் சாகுபடி!

காவிரி டெல்டா பகுதியில் சம்பா நெல் சாகுபடி தீவிரமாக இருக்கும். மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரைக் கொண்டு, சம்பா நெல் சாகுபடியைச் செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக இருப்பார்கள். எனவே, சம்பா நெல் சாகுபடியில் மகசூலைப் பெறுவதற்கான உத்திகளைப் பார்க்கலாம். இரகங்கள்…
More...
Enable Notifications OK No thanks