படைப் புழுக்களைக் கட்டுப்படுத்துதல்!

க்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப் புழுக்களைத் தொடக்க நிலையிலேயே கவனித்து, தடுப்பு வேலைகளைச் செய்தால், மகசூல் பாதிப்பை முற்றிலும் தவிர்க்கலாம்.

படைப் புழுக்களைக் கட்டுப்படுத்த, கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை இட வேண்டும்.

விதைப்புக்கு முன், ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு, 10 கிராம் பெவேரியா பேசியானா என்னும் பூசணக்கொல்லி வீதம் கலந்து அல்லது

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் தையோ மீத்தாக்செம் என்னும் இரசாயனப் பூசணக் கொல்லி வீதம் கலந்து, விதைகளை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மக்காச்சோள நிலத்தில் எள், சூரியகாந்தி, தட்டைப்பயறு, தீவனச்சோளம் ஆகியவற்றை வரப்புப் பயிராக இட வேண்டும். உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.

விதைத்த 10-15 நாட்களில், படைப்புழுவின் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க ஏதுவாக, ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சிப் பொறிகளை வைக்க வேண்டும்.

மக்காச் சோளத்தை விதைத்து 15-20 நாட்களில், இளம் புழுக்கள் தென்படும் போது, வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 1 ஈ.சி. மருந்தை, 10 லிட்டர் நீருக்கு 20 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

அல்லது 10 லிட்டர் நீருக்கு 4 கிராம் எமாமெக்டின் பென்சோயட் என்னும் பூச்சிக்கொல்லி வீதம் கலந்து தெளிக்கலாம்.

விதைத்து 40-45 நாட்களில் படைப் பழுக்கள் தென்படும் போது, 10 லிட்டர் நீருக்கு 80 கிராம் மெட்டாரைசியம் அனசோபிலே என்னும் பூசண மருந்து வீதம் கலந்து தெளிக்கலாம்.

புழுக்கள் வளர்ந்த நிலையில், பொருளாதாரச் சேதநிலை ஏற்படும் போது, இரசாயனப் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

ஏக்கருக்கு 100 மி.லி. ஸ்பைனிடோரம் 12 எஸ்.சி. மருந்து அல்லது 80 மி.லி. குளோரன்ட்ரனி லிப்ரோல் 18.5 எஸ்.சி. மருந்தைத் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!