My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

விவசாயிகளின் வயலுக்குச் செல்ல வேண்டும்: வேளாண் துறை செயலர் உத்தரவு!

வேளாண்மைத் துறை அலுவலர்கள், வாரத்தில் மூன்று நாட்கள் விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று, வேளாண்மைத் துறையின் செயலர் வி.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டு உள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலராகப் பொறுப்பேற்றுள்ள வி.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண் வணிகத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…
More...
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சமா? வாட்ஸ்அப்பில் புகார் தரலாம்!

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஆதாரங்களுடன், தனது செல்பேசி எண்ணில் புகார் தரலாம் என்று, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சண்முகசுந்தரம் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் மாநிலம் முழுவதும்…
More...
பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்வது, வேளாண் பெருமக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்முறையில், செடிவகைக் காய்கறிகள், கொடிவகைக் காய்கறிகள், கொய்மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையில், நூற்புழுக்கள் பல்கிப் பெருகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில்,…
More...
நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்கள் மண்ணில் மறைந்திருந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது. வேரில், முடிச்சுகள் ஏற்படுதல், அழுகல் ஏற்படுதல், வளர்ச்சிக் குன்றுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிருதல் போன்றவை, நூற்புழுக்கள் தாக்கிய பிறகு தெரியும் அறிகுறிகளாகும். எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.…
More...
பப்பாளியில் நூற்புழு நிர்வாகம்!

பப்பாளியில் நூற்புழு நிர்வாகம்!

பப்பாளிப் பயிரைத் தாக்கும் மிக முக்கியமான நூற்புழுக்களான, வேர் முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள், விதைகளின் முளைப்புத் திறனையும், செடிகளின் வளர்ச்சியையும் குறைக்கும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வேர்கள், மணிகள் கோர்த்ததைப் போன்ற தோற்றத்திலும் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட…
More...
மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் பயிர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலும் இதைப் பயிரிடுகின்றனர். இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களான வேரழுகல், இலைப்புள்ளி, கருகல் ஆகியன, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். கிழங்கழுகல் மற்றும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரின்…
More...
மண்வளம் காக்கும் இயற்கைவழி சத்து நிர்வாகம்!

மண்வளம் காக்கும் இயற்கைவழி சத்து நிர்வாகம்!

இயற்கை எருக்களில் தொழுயெரு, கம்போஸ்ட், பசுந்தாள் எரு ஆகியன, மண்ணில் ஈரத்தை ஈர்த்து வைக்கின்றன மற்றும் நுண்ணுயிர்கள் பெருக்கத்துக்கு உதவுகின்றன. பயிர்களுக்குத் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண் சத்துகளையும் அளிக்கின்றன. ஒரு டன் தொழுவுரம் சுமார் 50 கிலோ…
More...
மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன…
More...
பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப்…
More...
மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

மண்வளம் மற்றும் மகசூல் இலக்குக்கான உரங்கள்!

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம். மண்வளம் என்பது, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள், பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வகையில், போதியளவில் இருப்பதாகும். நிலத்துக்கு நிலம் மண்வளம் மாறுபடும். நம்…
More...
தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம்!

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத்தில், மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்புக் கருத்தரங்கம், 23.12.2024 மற்றும் 24.12.2024 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கின் தொடக்க விழாவில், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையப் பேராசிரியர் மற்றும் தலைவர்…
More...
காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்கும் மருந்து!

காட்டுப் பன்றிகளை விரட்டியடிக்கும் மருந்து!

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் பெருகி உள்ளதால் விவசாயிகள் பெருநஷ்டம் அடைகின்றனர். காட்டுப் பன்றிகள், நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வாழை, கத்தரி, தென்னங் கன்று உள்ளிட்ட பல்வேறு பயிர்களில் நுழைந்து மிகுந்த…
More...
அறுவடைக்குப் பிறகு வாழைக்காய்களைத் தாக்கும் நோய்கள்!

அறுவடைக்குப் பிறகு வாழைக்காய்களைத் தாக்கும் நோய்கள்!

இந்திய வேளாண்மையின் தரத்தை மேம்படுத்த, உணவு உற்பத்தியில் மட்டுமின்றி, உற்பத்திக்குப் பிந்தைய நிலைகளிலும் கவனம் செலுத்தினால், விவசாயிகளின் வருமான நிலையை உயர்த்தலாம். பருவநிலை மாற்றம், புதிய நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால், மகசூல் பாதித்து, அதிகப் பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது. உற்பத்தி…
More...
காய்கறிப் பயிர்களில் கவாத்து!

காய்கறிப் பயிர்களில் கவாத்து!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பழப் பயிர்கள், அடர்ந்து வளரும் பயிர்கள் ஆகியவற்றில் கூடுதலான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்கறிப் பயிர்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க முடியும். வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது, செடிகளைச் சரியான முறையில் வடிவமைப்பது மற்றும்…
More...
இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். இயற்கை வேளாண்மை என்பது, வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்ப்பதாகும். மக்கள் இப்போது இயற்கை வேளாண்மையைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். இதனால் கிடைக்கும் விளைபொருள்களில் வேதிப்பொருள்களின் எச்சம் இருப்பதில்லை. எனவே, உடலுக்குத் தீமை செய்யாத…
More...
வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

கரூர் மாவட்டம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக் குறித்த பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகின்றன.…
More...
பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப்பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
More...
பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர…
More...
வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிமாற்றம்!

நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) பேபிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், பெறப்படும் வேளாண் இடுபொருள்களுக்கான தொகையை, மின்னணு பணப் பரிமாற்ற முறையில் செலுத்தும் வசதி செய்யப்பட்டு…
More...