மண்ணும் மன்னுயிரும் வாழும் வகை செய்வோம்!
இயற்கை வேளாண்மை, சூழல் மேலாண்மையை நோக்கமாகக் கொண்டு 2011 ஆம் ஆண்டு முதல் மாதந்தோறும் தமிழில் வெளி வருகிறது பச்சை பூமி மாத இதழ்.
இதில், தகுதி வாய்ந்த வல்லுநர்களால் எழுதப்படும், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சுற்றுச்சூழல், மூலிகை மருத்துவம், உணவியல், மதிப்புக் கூட்டல், வாழ்வியல் சார்ந்த செய்திகள் இடம் பெறுகின்றன.
மேலும், சிறந்த வேளாண் பெருமக்களின் அனுபவங்கள், விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள், அவர்களுக்குத் துணை நிற்கும் வங்கிகள், நிறுவனங்கள் குறித்த செய்திகளும் இடம் பெறுகின்றன.
மரம் வளர்ப்பு, மழை நீர் சேமிப்பு, நிலத்தடி நீர்ப் பாதுகாப்பு, இயற்கை வேளாண்மை போன்றவற்றை வலியுறுத்துவதன் மூலம், காலங்காலமாக இந்த பூமியை உயிர்ப்புடன் இருக்கச் செய்ய முடியும் என்னும் உண்மையின் அடிப்படையில், அதற்கான வழிமுறைகளைச் சுமந்து, பொருளாதார நன்மை அடைதல் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, தூய சமூகக் கண்ணோட்டத்துடன் பச்சை பூமி வெளியிடப்படுகிறது.
இவ்வகையில் வெளிவரும் பச்சை பூமி இதழ், விவசாயிகள் மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள், வேளாண் துறையோடு தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அரசு அலுவலகங்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அரசு நூலகங்கள், கல்லூரி மாணவர்கள் என, பலதரப்பட்ட மக்களையும் சென்றடைகிறது.
இப்படி, விவசாயம் மட்டுமின்றி, வீட்டிலுள்ள அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் வெளிவரும் இந்த இதழை, சந்தா செலுத்துவதன் மூலம் உங்கள் வீட்டுக்கே வரவழைக்கலாம்.
மேலும், பச்சை பூமியின் pachaiboomi.in என்னும் இந்த இணையதளம் மூலமாக, கட்டுரைகளை எவ்வித கட்டணமின்றி தமிழில் படித்தறிய முடியும். ஆங்கிலத்திலும் பச்சை பூமியின் ஆக்கங்கள் வெளி வருகின்றன. அவற்றைப் படித்தறிய, pachaiboomi.com என்னும் தளத்தைப் பார்வையிடலாம்!