மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு மற்றும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்புப் போன்றவற்றால், இந்த பூமி தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வருகிறது.
அதனால் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. இதையெல்லாம், கருத்தில் கொண்டு வேதனை அடைந்த ஆனைமலை புலிகள் காப்பகப் பிரிவில் வனவராகப் பணியாற்றும் ப.ராஜன், சுற்றுச்சூழல் மேம்பாட்டை வலியுறுத்தி கவிதை ஒன்றை எழுதி, அதை பாடலாகவும் தயாரித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, வன உயிரினப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படும். இவ்வகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட விழாவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வனக் கோட்டங்களிலும் இந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
பச்சைப் புல் மலையே என்று தொடங்கும் அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்!
பச்சை பூமி