திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு சேர்க்கின்றனர். செயல்முறை விளக்கமும் செய்து காட்டுகின்றனர்.
இவ்வகையில், தேசிய தானியங்கள் தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், பொன்னவராயன் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம், தேசிய தானியங்கள் தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அன்றாட வாழ்வில் சிறு தானியங்களின் முக்கியத்துவம் பற்றி விளக்கினர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்கினர்.