கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2021
பால், சுத்தமான, சுவையான, சமச்சீரான, சத்தான சரிவிகித உணவுப் பொருளாகும். அதனால் தான், பச்சிளங் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகப் பால் விளங்குகிறது. எனவே, பாலானது நமது அன்றாட உணவில் தனித்த இடத்தை வகிக்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க பாலை, 30 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சாதாரண அறையிலும், 4 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள குளிர்ந்த அறையிலும், எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம் என்பது பலரும் அறிந்திராத செய்தியாகும். அதைப் பற்றி இங்கே விவரமாகப் பார்க்கலாம்.
கறவை மாட்டிலிருந்து சுத்தமான முறையில் கறக்கப்பட்ட பால், கோடைக் காலத்தில் சுமார் மூன்று மணி நேரமும், குளிர் காலத்தில் சுமார் ஐந்து மணி நேரமும் கெடாமல் இருக்கும். குறைந்தளவில் உற்பத்தி செய்யப்படும் பாலை, இந்தக் காலத்துக்குள் விற்று விடலாம்.
ஆனால், அதிகளவில் கிடைக்கும் பாலை, இந்தக் காலத்துக்குள் விற்று முடிப்பது சற்றுக் கடினம்.
எனவே, பாலைப் பதப்படுத்தி அல்லது மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றித் தான் விற்பனை செய்ய வேண்டும். பாலைப் பதப்படுத்தி, அதில் சர்க்கரை, நிறமூட்டிகள் போன்றவற்றைச் சேர்த்து
அல்லது பாலில் உள்ள நீரை வடிகட்டி கொழுப்புச் சத்தைச் செறிவூட்டி அல்லது பாலைத் திரிய வைத்து, புரதச் சத்தைச் செறிவூட்டி, மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
மதிப்பூட்டிய பால் பொருள்களின் வகைகள்
உறைநிலைப் பால் பொருள்கள், பாலைத் திரிய வைத்துத் தயாரிக்கும் பால் பொருள்கள், புளிக்க வைப்பதன் மூலம் கிடைக்கும் பால் பொருள்கள், சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் கெட்டியான பால் பொருள்கள் என, நான்கு வகைகள் உள்ளன.
எனவே, பாலை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றிக் கெடாமல் பாதுகாத்தால், நெடுநாட்கள் சேமித்து வைப்பதுடன், அதிகளவில் இலாபத்தையும் பெறலாம்.
முனைவர் மூ.சுதா,
உதவிப் பேராசிரியர், கால்நடை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி-627358.
முனைவர் க.தேவகி, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,
காட்டுப்பாக்கம், செங்கல்பட்டு-603 203.