சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

வைத்தியம் Patti Vaithiyam.jpg

1. பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும்.


2. மூச்சுப் பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.


3. சரும நோய்

கமலா ஆரஞ்சுத் தோலை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்துக் குளித்து வர சரும நோய் குணமாகும்.


4. தேமல்

வெள்ளைப் பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து மசிய அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தினமும் தேய்த்துக் குளித்து வர தேமல் குணமாகும்.


5. மூலம்

கருணைக் கிழங்கை சிறு துண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராகச் செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.


6. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கைத் தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டுச் சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.


7. வறட்டு இருமல்

எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.


8. சோர்வு நீங்க

வெறும் வயிற்றில் இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து பருகினால் சோர்வு நீங்கும், மார்புச் சளி அகலும்.


9. சிறுநீரகக் கோளாறு சரியாக!

காரட் சாறு 15 மில்லி, தேன் 10 மில்லி, எலுமிச்சைச்சாறு 5 மில்லி. இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறு அகலும்.


10. தோல் அரிப்பு நீங்க!

வினிகர் 50 மில்லி, ரோஸ் வாட்டர் 40 மில்லி. இந்த இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு தோலில் அரிப்புள்ள இடங்களில் பூசி வந்தால் எப்படிப்பட்ட தோலரிப்பும் தீரும். காலையில் பூசி மாலையில் குளிக்கலாம். இரவில் பூசி காலையில் குளிக்கலாம். இப்படிச் செய்து வந்தால் தோலரிப்பு நீங்கும்.


11. இரத்தக் கொதிப்புச் சரியாக!

நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லி, தேன் 15 மில்லி. இரண்டையும் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்; இரத்தக்கொதிப்புக் குணமாகும்.


12. மலேரியாக் காய்ச்சல் குணமாக!

கொசுவினால் பரவும் நோய்களில் மலேரியாவும் ஒன்று. இதை மூலிகை மருத்துவத்தின் மூலம் அருமையாகக் குணப்படுத்தலாம். ஒரு கைப்பிடி நொச்சி இலைகளையும் பத்து மிளகையும் நன்றாக இடித்து, அதில் 200 மில்லி நீரை விட்டு 100 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி, வேளைக்கு 30 மில்லி வீதம் காலை, பகல், இரவு என மூன்று குடிக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களுக்குக் குடித்தால் மலேரியா வராது. மலேரியாவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாட்களுக்குக் குடித்தால் மலேரியா ஓடியே போகும்.


13. மர்மக் காய்ச்சல் குணமாக!

ஆடாதோடை 2 இலை, விஷ்ணு கிரந்தி, பற்படாகம், கண்டங்கத்தரி, சுக்கு ஆகியவற்றைத் தலா 10 கிராம் எடுத்துக்கொண்டு 300 மில்லி நீர் விட்டு 150 மில்லியாகச் சுண்டக்காய்ச்ச வேண்டும். இந்தக் கஷாயத்தை 50 மில்லி வீதம் காலை, பகல், இரவு என மூன்று வேளைக்குக் குடித்தால் விஷ ஜூரம், மர்மக் காய்ச்சல் ஆகியன குணமாகும். அன்றாடம், மிளகு, சீரகம் கலந்த பொடியைச் சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் இக்காய்ச்சல்கள் நம்மை அண்டாது. இக்கலவையுடன் நிலவேம்புப் பொடியைச் சேர்த்தால் டெங்குக் காய்ச்சலும், வல்லாரைப் பொடியைச் சேர்த்தால் மூளைக் காய்ச்சலும் குணமாகும்.


14. தேமல்

வெள்ளைப் பூண்டை வெற்றிலையுடன் சேர்த்து மசிய அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தினமும் தேய்த்துக் குளித்து வந்தால், தேமல் குணமாகும்.


15. தொழுநோயை அகற்றும் எருக்கு!

எருக்கு இலையை அரைத்துச் சாறெடுத்து அதில் மூன்று துளியுடன் தேனை சேர்த்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அகலும். இதே மூன்று துளியுடன் விளக்கெண்ணெய்யைச் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். நான்கைந்து வெள்ளெருக்கம் பூக்களுடன் இஞ்சி, பூண்டைச் சேர்த்து 300 மில்லி நீர் விட்டு 150 மில்லியாக சுண்டக் காய்ச்சி நாளுக்கு மூன்று வேளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொழுநோயும், வெண்குஷ்டமும் தீரும். எருக்கம் வேரைக் கருக்கி விளக்கெண்ணெய்யில் கலந்து தடவினால் வெண்குஷ்டத்தால் ஏற்பட்ட புண்கள் ஆறும்.


16. முதுகுவலி குணமாக!

நான்குமுகக் கற்றாலை 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 10, திப்பிலி 20 கிராம், பனை வெல்லம் போதுமான அளவு. பனை வெல்லத்தைத் தவிர மற்ற பொருள்களை அடுப்பிலிட்டு நன்குக் காய்ச்சி கஷாயமாக்கிக்கொள்ள வேண்டும். இந்தக் கஷாயம் சற்றுக் கசப்பாக இருக்கும். அதனால் கசப்பைப் போக்கத் தேவையான அளவுக்குப் பனை வெல்லத்தைச் சேர்த்து இந்தக் கஷாயத்தைக் குடித்து வந்தால் முதுகுவலி குணமாகும். தினந்தோறும்கூட இதைக் குடித்து வரலாம்.


17. மாலைக்கண் குணமாக!

வாழைப்பூவையும் முருங்கைப்பூவையும் சம பாகமாக எடுத்துக்கொண்டு நல்லெண்ணெய்யில் வதக்கி 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் கண் நரம்புகள் பலமடையும். கண் பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோய் குணமாகும்.


18. கீழ்வாதம் அகல!

காசுக்கட்டிப்பொடி 2 தேக்கரண்டி, வசம்புப்பொடி ஒரு தேக்கரண்டி. இந்த இரண்டையும் நீர் விட்டு அரைத்து விழுதாக்கிப் பூசி வர கீழ்வாதம் ஓடிப்போகும்.


19. ஆறாத புண் ஆற!

சீத்தாப்பழ இலைகளைப் பறித்து வந்து நன்றாகக் கழுவி விட்டு, நீர் சேர்க்காமல் அம்மியிலோ மிக்ஸியிலோ இட்டு அரைத்துப் புண்ணில் வைத்துக் கட்டினால் ஆறாத புண், நாள்பட்ட புண், நாற்றமெடுக்கும் புண் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


20. சர்க்கரை நோயாளிகள் புத்துணர்வைப் பெற!

வல்லாரைப்பொடி, சீரகப்பொடி, சுக்குப்பொடி, தணியாத்தூள் ஆகியவற்றைத் தலா அரைத் தேக்கரண்டி எடுத்துக்கொண்டு, இவற்றுடன் ரோஜா இதழ்கள், நன்னாரி வேர், கொஞ்சம் வெல்லம், பால் ஆகியவற்றை 300 மில்லி நீரிலிட்டு நன்கு காய்ச்சி எடுத்து வடிகட்டிச் சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும்.


21. நீர் வேட்கைக் காய்ச்சல் தீர!

தாமரைக்கிழங்கு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நெல்லி வற்றல், கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றைத் தலா 5கிராம் எடுத்து 100மில்லி நீரில் நன்கு கொதிக்க விட்டுக் குடித்து வந்தால் நீர் வேட்கைக் காய்ச்சல் தீரும்.


22. உள்ளுறுப்புகள் பலம் பெற!

கிராம்பைப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதில், 2 கிராம் அளவுக்கு எடுத்துத் தேனில் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் என அனைத்து உள்ளுறுப்புகளும் பலமடையும். குறைந்தது ஒரு மண்டலம், அதாவது 48 நாட்களாவது சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


23. வெண்புள்ளிகள் குணமாக!

தேவையான பொருள்கள் : பூண்டு, நவச்சாரம். பூண்டை இடித்து 30 மில்லி அளவுக்குச் சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இடித்துத் தூளாக்கிய 10 கிராம் நவச்சாரத்தைக் கலக்க வேண்டும். இந்தக் கலவையை வெண்புள்ளிகள் உள்ள இடங்களில் ஒரு மண்டலத்துக்கு அதாவது 48 நாட்களுக்குத் தடவிவர வெண்புள்ளிகள் மறைந்து அந்த இடங்களில் உள்ள தோல்பகுதி இயல்பு நிலைக்கு மாறும். இதைப்போல, அறுகம்புல் தலத்தைத் தடவி, சூரியக்குளியல் செய்து வந்தாலும் வெண்புள்ளிகள் அகலும். மேலும் சிவனார்வேம்புப் பொடியை 5 கிராம் வீதம் காலை, மாலையில் சாப்பிட்டு வர வெண்புள்ளிகள் அகலும்.


24. மூளைக்கட்டி, இதயநோய், புற்றுநோய் குணமாக!

கல்கண்டைப் பொடியாக்கி அதில் உலர் திராட்சையைக் கலந்து அவ்வப்போது உண்டு வந்தால் மூளைக்கட்டி வராமல் தடுக்கலாம். புற்றுநோய் வேதனையைக் குறைக்கலாம். இதய நோயிலிருந்தும் விடுபடலாம். எனவே, கல்கண்டு உலர் திராட்சைக் கலவையைத் தொடர்ந்து நம் உணவில் சேர்த்து வந்தால் மூளைக்கட்டி, இதயநோய், புற்றுநோய் ஆகியவை நம்மை அண்ட விடாமல் தடுக்கலாம். இதேபோல நெல்லிக்காயில் மஞ்சளைச் சேர்த்து உண்டுவர புற்றுநோய்ச் சிக்கலும், வல்லாரையை உணவில் சேர்த்து வந்தால் மூளைக்கட்டி போன்ற பாதிப்பும் ஏற்படுவதைத் தடுக்கலாம். கையளவு துளசியை மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் கையளவு இதயத்துக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். மிளகைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வர, இரத்த அடைப்பு அகலும்.


25. மூச்சுப் பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.


மு.மகேஷ்வரி

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading