அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

அட்மா WhatsApp Image 2022 08 22 at 4.28.38 PM 1

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில், வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு, வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக்குழுத் தலைவர் பி.பி.தனராசு தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் செயல்பாடுகள், திட்ட நோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்குச் சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும்; பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல் விளக்கம், பண்ணைப்பள்ளி போன்ற திட்டப் பணிகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் மானியத் திட்டங்கள். தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள். கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் தடுப்பூசி முகாம்கள், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், அவற்றுக்காக வழங்கப்படும் மானியங்கள், பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், மானியங்கள், இடுபொருள்கள் குறித்தும்,

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்கள், உழவர் சந்தை, சேமிப்புக் கிடங்கு குறித்தும், கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வன், வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர் நளினி, பட்டு உதவி ஆய்வாளர் கோமதி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் சற்குணம் ஆகியோர் பங்கேற்று, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், அட்மா திட்டப் பணிகள், முன்னேற்றம் மற்றும் விவரங்களையும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும், வருகை புரிந்த விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளித்து நன்றி கூறினார்.


பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading