மருத்துவர் நோய் என்னவென்று சோதிக்கிறார். அதற்குப் புரியாத மொழியில் பெயரொன்றை வைக்கிறார். பிறகு, சில மருந்துகளை எழுதுகிறார். இந்த மருந்துகள் எல்லாம் மனித உடலுக்கு அந்நியமானவை. அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது எப்படித் தீமை பயக்குமோ, அதேயளவில், மாத்திரையானாலும், ஊசியானாலும் தீமை பயக்கிறது.
நோயினால் ஏற்படும் தீமைகளை நீக்குவதற்கு நஞ்சுகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள். சில நஞ்சுகள் நோயாளிகளை மெல்ல மெல்லக் கொல்லுகின்றன. சில நோயாளியை உடனே கொல்லுகின்றன. இப்படி, நஞ்சுகளை நோயாளிகளுக்கு ஊட்டுவதற்கு, லைசென்ஸ் வாங்கி வைத்திருப்பவர் தான் டாக்டர்.
உடல் வேதனை குறைந்தால் சரியான மருந்து. இப்படி அறிவதே அலோபதி. இல்லாவிடில் வேறு மருந்தை நோயாளியின் உடலில் செலுத்தி சோதிக்கிறார். உடனடி வேதனை குறைந்தால் நோய்க்கான வேர்க்காரணம் நீடிக்கிறது. அது நீக்கப்படவில்லை. உடலிலிருந்து உடலுக்கு அந்நியமானவை நீக்கப்படும் போது தான் நோயாளி குணமாகிறார்.
இதைத் தான் வள்ளுவர்,
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு
என்று கூறுகிறார்.
உண்டது அனைத்தும் வெளியேறிய பின்பும் வயிற்றில் காலியிடம் இருக்குமாறு உண்பதே நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அடிப்படை. மீண்டும் மீண்டும் நஞ்சை உண்பது, தொடர்ந்து நோயாளியாக இருப்பதற்கே உதவும்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…