முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை, உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை, நோயாளிகள் இல்லை, அநீதி இல்லை, விசாரணை, தண்டனையும் இல்லை.
சாத்தான் ஒரு வேலையைச் செய்தான். வெளியில் இருந்து நெருப்பைக் கொண்டு வந்தான். ஒரு சமையற்காரனையும் கூட்டி வந்தான். அவன் வறுத்தும் வேக வைத்தும், நாக்குக்கு ருசியாகச் சமைத்துக் கொடுத்தான். அதனால், இராசாவில் இருந்து அனைவரும் தேவைக்கு அதிகமாக உண்ணத் தொடங்கினர்.
சமைக்கும் ஆளிடம் உப்பு என்று ஒரு பொருளைக் கொண்டு வந்து கொடுத்தான் சாத்தான். இதனால் சமைத்த உணவில் இன்னும் கொஞ்சம் ருசி கூடியது. மக்கள் வயிற்றை மறந்தார்கள். நாக்குக்காகவே உண்டார்கள். சாத்தான் அத்துடன் நிற்கவில்லை.
சமையற்காரன் பேச்சை எல்லோரும் கேட்கும் வகை செய்தான். இதற்காக அவன், ஆடு, கோழி, முயல், பன்றி இறைச்சியை உணவாகச் சமைத்தான். பலரும் விரும்பினார்கள். இராசாவின் தம்பி இராசாவைக் கொன்று விட்டு இராசாவானான்.
மேலும் இந்த இராசா தன்னையே நீதிபதியாக ஆக்கிக் கொண்டான். எப்போதும் அடிதடி சண்டை என்றானது. இதைப் பார்த்த முனிவர் ஒருவர், அநீதியை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு வழி சொன்னார். அதாவது, உங்களால் படைக்க முடியாத எதையும் அழிக்க உங்களுக்கு உரிமை கிடையாது. விலங்குகளைக் கொல்லாதீர்கள் என்றார். புலால் உண்ணாமை, உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் முதற்படி.
நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…