நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், 08.03.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பப் பயிற்சி நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், குறைந்த கால நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் ஊர்க் குளங்களில் ஆகாயத் தாமரையை, உயிர்ம முறையில் கட்டுப்படுத்துதல் மூலம், சமூக பொருளாதார நிலையை முன்னேற்றுதல் என்னும் தலைப்பில், மீன் வளர்ப்புத் தொழில் நுட்பப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில், மீன் வளர்ப்பு விவசாயிகள், பண்ணை மகளிர், கிராம இளைஞர்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுடையோர், தங்கள் வருகையைப் பதிவு செய்வதற்கு, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
04365 299806 அல்லது 88388 82451,
முதலில் பதிவு செய்யும் 100 பேர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்வோர்க்கு, கீழ்க்கண்ட நிபந்தனைகளின் படி, மீன் குஞ்சுகள் வழங்கப்படும்.
+ சொந்தப் பெயரில் பண்ணைக் குட்டை இருக்க வேண்டும்.
+ குளத்தில் 6 முதல் 10 மாதம் வரை, நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
+ ஆழ்துளைக் கிணறு வசதியுள்ள குளங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
குறிப்பு: பயிற்சிக்கு வரும் போது, ஆதார் அட்டை நகலை எடுத்து வர வேண்டும்.
செய்தி: திட்ட ஒருங்கிணப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம்.