உழவர் பயிற்சி நிலையத்தில் அமைப்பாளர்களுக்குப் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையக் கூட்டரங்கில், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், அமைப்பாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் 30 அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியில், நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மைத் துணை இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை,

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, விதைச் சான்றளிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, வனத்துறை போன்ற துறைகள் சார்ந்த மானியங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை வழங்கிடக் கேட்டுக் கொண்டு பயிற்சியைத் தொடக்கி வைத்தார்.

இப்பயிற்சியில், நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர்ப் பாசனம்) சுதா, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சிவசக்தி,

கால்நடை உதவி மருத்துவர் வெள்ளைச்சாமி, வனத்துறை வனவர் சங்கீதா, வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி, மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் செங்கோட்டுவேல்,

பட்டு வளர்ச்சித் துறை உதவி ஆய்வாளர் சாந்தி, தோட்டக்கலை உதவி தோட்டக்கலை அலுவலர் கணேசன், விதைச் சான்றளிப்புத் துறை வேளாண் அலுவலர் ரஞ்சிதா,

வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் உதவி வேளாண் அலுவலர் மலர்க்கொடி ஆகியோர், தங்களது துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

பயிற்சியில், உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் தனலட்சுமி, தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர், பயிற்சியின் ஒரு பகுதியாக, வருகை புரிந்த அமைப்பாளர்களுக்கு உயிர் உர விதை நேர்த்தி மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி விதை நேர்த்தியைச் செய்து காட்டி விளக்கம் அளித்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த அட்மா திட்ட வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் இரமேஷ், கணினி நிரல்வர் சத்தியராஜ் ஆகியோர், வருகை புரிந்த அமைப்பாளர்களுக்கு நன்றி கூறினர்.


செய்தி: வேளாண்மைத் துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!