பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர், நத்தம் பகுதியில் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, இந்த மாணவர்கள், சமுத்திராப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், இளம் குழந்தைகள் மனதில் விவசாய ஆர்வத்தைத் தூண்டும் வகையில், மா மற்றும் புங்கன் கன்றுகளை நடவு செய்தனர்.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை முத்தம்மாள் மற்றும் இதர ஆசிரியர்களும் மரக் கன்றுகளை நட்டனர்.
மேலும், தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்களும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களும் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் கல்வியின் அவசியம் குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
செய்தி: பாலமுருகன் மற்றும் பயிற்சி மாணவர்கள்.