கட்லா மீன்!

ட்லா மீன், தமிழில் தோப்பா மீன், கங்கைக் கெண்டை எனப்படும்.

கங்கை ஆற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்லா மீன், இந்தியப் பெருங் கெண்டை இனங்களில் மிக வேகமாக வளரும் தன்மை மிக்கது.

பெரிய தலை, அகன்ற உடலைக் கொண்ட இவ்வினம், நீரின் மேற்பரப்பில் அதிகமாக இருக்கும்.

விலங்கின நுண்ணுயிர் மிதவைகள், பாசிகள் மற்றும் மட்கிய பொருள்களை உண்ணும்.

இதன் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற வகையில், இதன் வாய் சற்று மேல்நோக்கி அமைந்திருக்கும்.

அங்கக உரங்கள் நிறைந்த குளத்தில், இம்மீன் வேகமாக வளர்வதால், பொதுக் குட்டைகளில் வளர்க்கப் படுகிறது.

மிதவை உயிரிகளால் குளத்தில் ஏற்படும் கலங்கல் தன்மையைக் குறைக்க, கட்லாவுடன் இறால்கள் சேர்த்து வளர்க்கப் படுகின்றன.

நன்னீரிலும் உவர் நீரிலும் வளர்க்கப்படும் கூட்டு மீன் வளர்ப்பில், 10-30 சத அளவில் கட்லா மீன்கள் சேர்க்கப் படுகின்றன.

கட்லாவை முறையாக வளர்த்தால், ஓராண்டில் ஒரு மீனின் எடை 1-1.5 கிலோ இருக்கும். இம்மீன் 2 வயதுக்கு மேல் இனப்பெருக்கம் செய்யத் தயாராகும்.


தொகுப்பு: பசுமை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!