உடல் சூடாகக் காரணங்கள்: இறுக்கமான மற்றும் செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணிதல். நோய்த் தொற்று.
தைராய்டு சுரப்பு அதிகமாகி, உடலில் வளர்சிதை மாற்றம் நிகழ்தல். அதிக வேலை அல்லது அதிகளவில் உடற்பயிற்சி செய்தல்.
எடுத்துக் கொள்ளும் மருந்துகள். எ.கா: amphetamines, cocaine. நரம்புக் கோளாறுகள். வியர்வைச் சுரப்பைப் பாதிக்கும் சொரியாசிஸ்,
ஸ்கிலிரோசிஸ் போன்ற நிகழ்வுகள். உடலில் அதிகமாக வெய்யில் படுதல்.
உடல் சூட்டைக் குறைக்கும் முறைகள்: சூடான மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்த்தல். எண்ணெய் மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகள்,
புத்துணர்வைத் தரும் ஆல்கஹால், காப்பி, டீ ஆகியவற்றைத் தவிர்த்தல்.
சோடியம் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுதல்.
கொட்டை உணவுகளைத் தினமும் உண்பதைத் தவிர்த்தல். மாமிச உணவைத் தவிர்த்தல்.
சைவ உணவை விரும்புதல்.தினமும் காலையில் மாதுளம் பழச் சாற்றைக் குடிக்கலாம்.
வாயகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை வைத்து அதில் பாதங்களை மூழ்க வைத்தால், உடலிலுள்ள அதிக வெப்பம் படிப்படியாகக் குறையும்.
இரவில் தூங்குமுன் கசகசாவை அரைத்துப் பாலில் கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சியாகி நல்ல தூக்கம் வரும்.
இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. ஒரு மேசைக் கரண்டி வெந்தயத்தை இரவில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பாலுடன் தேனைக் கலந்து தினமும் குடிக்கலாம். சந்தனம், நீர், பால் ஆகிய மூன்றையும் கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம்.
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லி போன்ற பழங்களை, பழமாகவோ சாறாகவோ அருந்தினால், சூடு தணிந்து நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகும்.
வியர்வையில் வெளியேறும் நீரை ஈடுகட்டும் வகையில், நீரைப் பருக வேண்டும்.
குளிர்ப் பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீர் அல்லது பழச்சாற்றை அருந்தக் கூடாது.
கொழுப்புக் குறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். உலர் பழங்களைக் கொஞ்சமாக உண்ண வேண்டும்.
உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
முனைவர் இல.மாலதி.