இது, நாம் உருவாக்கும் ஒருவகை நீர்ச் சேமிப்புக் கட்டுமானம் ஆகும்.
நீரை அதிகளவில் ஈர்க்கும் நிலத்தை உள்ளடக்கி, இந்த அமைப்புக் கட்டப்படுகிறது.
இதனால், நீர் ஊடுருவிச் சென்று, நீர் வளத்தை உயர்த்தும்.
நிலத்தடி ஊற்றுகளுடன் தொடர்புள்ள, உடையும் அல்லது உடைந்த பாறைகளால் ஆன, இரண்டாம் அல்லது மூன்றாம் வகை நீரோடையில், இது அமைக்கப்படுகிறது.
இந்த அமைப்புகள் அமைந்துள்ள பகுதியின் கீழ்த் தட்டுகளில், கிணறுகளும், பாசனம் தேவைப்படும் நிலங்களும் இருந்தால் தான், சேமிக்கும் நீரை, முறையாகப் பயன்படுத்த முடியும்.
உறிஞ்சு குளங்களின் அளவு, குளங்களின் அடிப்பகுதியின் ஊடுருவும் திறனைப் பொறுத்தது.
பொதுவாக, 3 முதல் 4 மீட்டர் வரை, நீரைத் தேக்கி வைக்கும் வகையில், குளங்களை அமைக்க வேண்டும். இந்தக் குளங்கள் மண்ணால் தான் அமைக்கப்படும்.
நீர் வழிந்தோடும் பகுதி மட்டுமே சிமெண்ட் மூலம் கட்டப்படும். இந்தக் கட்டுமானத்தின் நோக்கம், நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துவது தான்.
கட்டுமானத்தின் அடிப்பகுதி, அதாவது, தரைப்பகுதி வழியாக, நீர் ஊடுருவும் வகையில் அமைக்கப்படுகிறது.
4.5 மீட்டர் உயரமுள்ள குளங்களில், வழிந்தோடும் நீருக்கான கால்வாய்கள் தேவையில்லை. நிலத்தின் தரைப் பகுதிக்கும், குளத்தின் அடிப்பகுதிக்கும் இடையே, சேர்ப்புப் பகுதி மட்டுமே தேவை.
நன்மைகள்
மழைக் காலத்தில் நிலத்தடி நீரை அதிகமாக்கும்.
நீரோட்ட வேகத்தைக் குறைத்து, மண்ணரிப்பைத் தடுக்கும்.
வெள்ளத்தைத் தடுக்கலாம்.
சாகுபடிப் பரப்பைப் பெருக்க உதவும்.
செய்தி: இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.